×

விஜயகாந்த்தை சந்திக்கிறார் டிடிவி தினகரன்: பிரேமலதா துணைமுதல்வர் வேட்பாளராகிறார்!

அதிமுக தங்களை தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று தொடர்ந்து புலம்பிக்கொண்டே வந்தார் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த். அப்புறம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியபின்னர், ரொம்பவும்குறைவான தொகுதிகளை ஒதுக்குகிறார்கள் என்றுகூறி அக்கூட்டணியில் இருந்து வெளியேறி அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் திருப்தி இல்லாமல் தனித்து போட்டி என முடிவெடுத்தார். தனித்து போட்டியிட தொண்டர்கள் ஆர்வம் காட்டததால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. இந்த பேச்சில் 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கியது அமமுக. ஒப்பந்தமும் கையெழுத்தானது. அந்த நேரத்தில் டிடிவி
 

அதிமுக தங்களை தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று தொடர்ந்து புலம்பிக்கொண்டே வந்தார் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த். அப்புறம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியபின்னர், ரொம்பவும்குறைவான தொகுதிகளை ஒதுக்குகிறார்கள் என்றுகூறி அக்கூட்டணியில் இருந்து வெளியேறி அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் திருப்தி இல்லாமல் தனித்து போட்டி என முடிவெடுத்தார். தனித்து போட்டியிட தொண்டர்கள் ஆர்வம் காட்டததால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக.

இந்த பேச்சில் 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கியது அமமுக. ஒப்பந்தமும் கையெழுத்தானது. அந்த நேரத்தில் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் இருந்ததால் அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவனிடம் ஒப்பந்தத்தை அளித்தார்.

முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமமுக நிராகரித்துவிட்டது. அதனால், பிரேமலதாவை துணை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க அமமுக சம்மதித்துள்ளதாக தகவல்.

மேலும், கூட்டணி ஒப்பந்தம் ஆன பின்னர் டிடிவி தினகரன் இதுவரையிலும் விஜயகாந்தை சந்திக்கவில்லை. அதனால் அவர் விரைவில் விஜயகாந்த்தை சந்திக்க இருப்பதாக சொல்கிறது அமமுக வட்டாரம்.