×

திமுகவுக்கு போட்டியாக காங்கிரசிலும் களமிறங்கும் வாரிசுகள்

திமுகவும் காங்கிரசும் போட்டி போட்டுக்கொண்டு வாரிசுகளை களமிறக்கி இருக்கும் சூழலில் வாரிசுகள் அடிப்படையில் சீட் ஒதுக்கப்படாமல் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது அதிமுக. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் 15க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு வாய்பளிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மகன் உதயநிதி, டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா, ஐ.பெரியாசாமியின் மகன் செந்தில்குமார், பொய்யாமொழியின் மகன் அன்பில், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜன், தங்கபாண்டியன் மகன் தென்னரசு, பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை, நாகநாதன் மகன் டாக்டர் எழிலன்,
 

திமுகவும் காங்கிரசும் போட்டி போட்டுக்கொண்டு வாரிசுகளை களமிறக்கி இருக்கும் சூழலில் வாரிசுகள் அடிப்படையில் சீட் ஒதுக்கப்படாமல் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது அதிமுக.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் 15க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு வாய்பளிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மகன் உதயநிதி, டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா, ஐ.பெரியாசாமியின் மகன் செந்தில்குமார், பொய்யாமொழியின் மகன் அன்பில், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜன், தங்கபாண்டியன் மகன் தென்னரசு, பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை, நாகநாதன் மகன் டாக்டர் எழிலன், பெரியண்ணன் மகன் இன்பசேகரன், சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், காதர் பாட்ஷா மகன் முத்துராமலிங்கம் மற்றும் ஜெ.அன்பழகன் தம்பி கருணாநிதி, கே.பி.பி.சாமியின் தம்பி சங்கர், காஞ்சி அண்ணாமலையின் பேரன் எழிலரசன் ஆகிய வாரிசுகளுக்கு வாய்ப்புகள் அள்ளி குவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் திமுக கூட்டணி கட்சியான காங்கிரசிலும் திருவாடணை தொகுதியில் கே.ஆர்.ராமசாமி மகன் கரு. மாணிக்கம், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா, அறந்தாங்கியில் திருநாவுக்கரசு மகன் எஸ்.டி.ராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டத்தில் ஊர்வசி சோப் செல்வராஜ் மகன் எஸ்.அமிர்தராஜ் மற்றும் மேலூரில் மாணிக்கம் தாகூர் மாமனார் டி.ரவிச்சந்திரன் என்று வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், அதிமுகவில் வாரிசுகள் அடிப்படையில் சீட் ஒதுக்கப்படவில்லை என்பது ஆச்சரியம்தான்.