×

‘’கமல் கட்சியின் உண்மையான “பலம்” தேர்தலுக்கு முன்பே அம்பலமானது’’

அதிமுக கூட்டணியில் இருந்து தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறி அக்கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமார், கமல்ஹாசனை சந்தித்து அவர் தலைமையில் புதிய கூட்டணியை அமைத்தார். திமுகவில் ஒரு சீட்டுக்கு மேல் தர முடியாது என்று சொல்லிவிட்டதால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறிய அவர்தான் முதலில் சரத்குமாருடன் இணைந்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசியல் விமர்சகர் அருணன், ’’சமக, ஐஜேகே கட்சிகளுக்கு
 

அதிமுக கூட்டணியில் இருந்து தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறி அக்கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமார், கமல்ஹாசனை சந்தித்து அவர் தலைமையில் புதிய கூட்டணியை அமைத்தார். திமுகவில் ஒரு சீட்டுக்கு மேல் தர முடியாது என்று சொல்லிவிட்டதால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறிய அவர்தான் முதலில் சரத்குமாருடன் இணைந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் அருணன், ’’சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கியிருக்கிறார் கமல். அந்தக் கட்சிகளின் பலம் என்னவென்று சகலருக்கும் தெரியும். இதிலிருந்து கமல் கட்சியின் உண்மையான “பலம்” தேர்தலுக்கு முன்பே அம்பலமானது. இவர்தான் தன்னை அடுத்த முதல்வர் என்று கூச்சமில்லாமல் முன்னிருத்தி வருகிறார்!’’ என்று விமர்சித்துள்ளார்.