×

’’தானே முன்வந்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று மண்டியிட்டுவிட்டார் உதயநிதி’’

தேர்தலில் போட்டியிடவில்லை என்று நாடகமாடிவிட்டு, போட்டியிடுவதில் குறியாக இருக்கிறாராம் உதயநிதி. நாடகம் அம்பலமாகிவிட்டது என்று பாஜக சாடியிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி வருகிறார்கள். இதுபற்றிய கேள்விகளுக்கு எல்லாம், திமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. கட்சிக்காக உழைத்தவர்களுக்குதான் பதவி என்று சொல்லி வருகிறார். ஆனாலும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும்
 

தேர்தலில் போட்டியிடவில்லை என்று நாடகமாடிவிட்டு, போட்டியிடுவதில் குறியாக இருக்கிறாராம் உதயநிதி. நாடகம் அம்பலமாகிவிட்டது என்று பாஜக சாடியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி வருகிறார்கள்.

இதுபற்றிய கேள்விகளுக்கு எல்லாம், திமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. கட்சிக்காக உழைத்தவர்களுக்குதான் பதவி என்று சொல்லி வருகிறார். ஆனாலும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். உதயநிதியும் தனியாக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் வரும் 10ம் தேதி வெளியாகும் திமுக வேட்பாளர்கள் பட்டியலில் உதயநிதி பெயர் இருக்காது என்றார்கள்.

உதயநிதிக்கு எப்படியும் சீட் கொடுப்பது உறுதி என்று நினைத்துக்கொண்டு சீனியர்கள் பலரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டதால், இப்போதைக்கு நீ போட்டியிட வேண்டாம். நீ போட்டியிட்டால் இதை வைத்தே எதிர்க்கட்சியினர் பிரச்சாரத்தை ஓட்டிவிடுவார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் சொல்லி இருக்கிறார். அதை ஏற்க மனசில்லாமல், எதுவும் சொல்லாமல் அப்செட்டில் வெளியேறிவிட்டார் உதயநிதி.

ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

அவர், ’’வருகிற சட்டமன்ற தேர்தலில் போடியிட போவதில்லை என்கிற ஒரு தகவலை தனது கட்சியினரிடையே பரப்பினால் தன் வீட்டின் முன் நின்று தொண்டர்கள் கூட்டம் தேர்தலில் நிற்க சொல்லி போராடும், தீக்குளிக்கும், இதன் மூலம் தனக்கான முக்கியத்துவத்தை வெளியுலகிற்கு காட்டமுடியும் என்று நினைத்த உதவாத நிதியின்கனவு கலைந்துவிட்டதால், தானே முன்வந்து தற்போது தேர்தலில் போட்டியிடுவேன் என்று மண்டியிட்டுவிட்டார்.! யாரை ஏமாற்ற இந்த நாடகம் உதவாதநிதி?வாரிசு அரசியல் எனும் குற்றச்சாட்டை மறைக்க நீங்கள் நடத்திய நாடகம் அம்பலமாகிவிட்டது’’என்கிறார்.