×

இதுதான் அதிமுகவிற்கும் நடக்கும்; எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. காங்., எம்.பி ஜோதிமணி

அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அதே நேரம் அமமுகவினை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சொல்லி வந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் சசிகலா. சசிகலாவின் முடிவை பாஜகவும் வரவேற்றிருக்கிறது. இந்நிலையில், ‘’ஜெயலலிதாவும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது வரலாறு. பிஜேபி தமிழகத்தை அழிக்க நடத்தும் நாடகத்தில் சசிகலா,எடப்பாடி பழனிசாமி அனைவரும் பொம்மைகள் தான். ஊழல் கயிறு கொண்டு
 

அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அதே நேரம் அமமுகவினை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சொல்லி வந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் சசிகலா.

சசிகலாவின் முடிவை பாஜகவும் வரவேற்றிருக்கிறது. இந்நிலையில், ‘’ஜெயலலிதாவும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது வரலாறு. பிஜேபி தமிழகத்தை அழிக்க நடத்தும் நாடகத்தில் சசிகலா,எடப்பாடி பழனிசாமி அனைவரும் பொம்மைகள் தான். ஊழல் கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ள பொம்மைகள். தமிழக மக்கள்தான் விழிப்போடு இருக்கவேண்டும்’’என்று எச்சரிக்கும் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,

’’ஒரு காலத்தில் அசாமில் ஏஜிபி ,பிஜேபிக்கு 20 சீட் கொடுத்தது. இன்று அதன் தலைவர் முன்னாள் முதலமைச்சர் ப்ரஃபல்ல குமார் மகாந்தாவிற்கு அவரது சொந்த தொகுதியை விட்டுத்தர மறுத்துவிட்டு, பிஜேபி வேட்பாளரை களமிறக்குகிறது பிஜேபி. நாளை இதுதான் அதிமுகவிற்கும் நடக்கும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்’’ என்றும் எச்சரிக்கிறார்.