×

சரத்குமாருக்கு நன்றி சொன்ன கமல்

அதிமுக கூட்டணியில் சமகவை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் விரக்தியில் அக்கூட்டணியில் இருந்து விலகி, ஐஜேகேவுடன் கூட்டணை அமைத்தார் சரத்குமார். அடுத்து கமல்ஹாசனை சந்தித்து அவருடனும் கூட்டணி அமைத்தார். இதன்பின்னர், தூத்துக்குடியில் நடந்த சமக பிரச்சார கூட்டத்தில் பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் சரத்குமார், “மக்கள் நீதி மய்யம் , சமத்துவ மக்கள் கட்சி , ஐஜேகே கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல் ஹாசன் தான். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள்
 

அதிமுக கூட்டணியில் சமகவை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் விரக்தியில் அக்கூட்டணியில் இருந்து விலகி, ஐஜேகேவுடன் கூட்டணை அமைத்தார் சரத்குமார். அடுத்து கமல்ஹாசனை சந்தித்து அவருடனும் கூட்டணி அமைத்தார்.

இதன்பின்னர், தூத்துக்குடியில் நடந்த சமக பிரச்சார கூட்டத்தில் பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் சரத்குமார், “மக்கள் நீதி மய்யம் , சமத்துவ மக்கள் கட்சி , ஐஜேகே கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல் ஹாசன் தான். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும் கொள்கை ரீதியாக ஒன்று சேர்கிறோம்’’என்றார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ’’மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. சரத்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்’’என்று தெரிவித்துள்ளார்.