×

இன்று மற்றும் நாளை மாலைக்குள்..சென்னை பரபரப்பு

எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல்நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்ததுமே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன என்றும் அறிவித்தார். இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையினை எடுத்து சென்றால் அதற்குரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என்றும், பணப்பட்டுவாடா புகார் வந்தால் உடனே அது தொடர்பாக நடவடிக்கை
 

எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல்நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்ததுமே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன என்றும் அறிவித்தார்.

இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையினை எடுத்து சென்றால் அதற்குரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என்றும், பணப்பட்டுவாடா புகார் வந்தால் உடனே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தேர்தல் நடவடிக்கை அமலுக்கு வந்விட்டு நிலையில், அரசு அலுவலகங்கள், அரசு இடங்களில் அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள், சுவரொட்டிகள், கொடிகள் , பதாகைகள் இருந்தால் உடனே அகற்றிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் விளம்பரங்களை அகற்றிவிட வேண்டும் என்றும், ரயில்நிலையங்கள், போக்குவரத்து நிலையங்களில் நாளைய தினத்திற்குள்ளும், தனியார் இடங்களில் திங்கள் கிழமைக்குள் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னையில் இதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டிருக்கிறது.