×

அமைச்சர் சொன்னது என்னாச்சு? சென்னையில் ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்களின் 12ஆவது ஊதிய ஒப்பந்தத்தினை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை தொடங்கியுள்ளன போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கினால் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் பேருந்துகள் ஓடவில்லை. இன்று வழக்கம்போல பேருந்துகள் இயங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். ஆனால், வழக்கம் போல பேருந்துகள் ஓடவில்லை. சென்னையில் ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் பயணிகள் பெரிதும்
 

போக்குவரத்து தொழிலாளர்களின் 12ஆவது ஊதிய ஒப்பந்தத்தினை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை தொடங்கியுள்ளன போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கினால் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் பேருந்துகள் ஓடவில்லை.

இன்று வழக்கம்போல பேருந்துகள் இயங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். ஆனால், வழக்கம் போல பேருந்துகள் ஓடவில்லை. சென்னையில் ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அவர்களை அரசு அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.. அரசுப் பேருந்துகள் இயங்காவிட்டால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும்; பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். இந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு , போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்களின் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுத்தி இருக்கிறார். ராமதாஸ் மாதிரி பல்வேறு கட்சியினரும் தலைவர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஆனாலும் ஊழியர்களின் ஸ்டிரைக்கினால் சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து காலை 7 மணி வரைக்கும் 30 சதவிகிதம் பேருந்துகள் இயக்கம் என்று அரசு அறிவித்திருக்கிறது.