×

’’நீங்களும் உங்கள் மகனும் தமிழகத்தை விட்டே ஓடியபோது தந்தையை காத்தது பி. ஜே. பி அரசு’’

ஆளும் அரசின் உறுப்பினர்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை இழந்த புதுச்சேரி அரசு கவிழ்ந்தது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’’ திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி , ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது. அதிகார துஷ்பிரயோகம் இது!’’ என்றார். மேலும், ’’கிரண்பேடியைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறித்தது . சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் குதிரை பேரம் நடத்தினார்கள். தமிழிசை சவுந்தரராசன்
 

ஆளும் அரசின் உறுப்பினர்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை இழந்த புதுச்சேரி அரசு கவிழ்ந்தது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’’ திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி , ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது. அதிகார துஷ்பிரயோகம் இது!’’ என்றார்.

மேலும், ’’கிரண்பேடியைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறித்தது . சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் குதிரை பேரம் நடத்தினார்கள். தமிழிசை சவுந்தரராசன் அவர்களை துணை நிலை ஆளுநராக நியமித்த போதே உள்நோக்கத்தைக் கண்டித்தேன். பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளையும் – சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலை வாழ்த்துகிறேன் .

தமிழ்நாட்டில் அடிமை அ.தி.மு.க.வை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவதுபோல , புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயற்சித்தால் நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தி.மு.க. துணை நிற்கும் . ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்’’ என்று எச்சரித்திருக்கிறார்.

ஸ்டாலின் இந்த அளவுக்கு கடுமை காட்டியது குறித்து தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், ’’பாண்டிச்சேரியில் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் ராஜினாமா செய்ததை, நாராயணசாமி ஜனநாயகம் காக்க ராஜினாமா செய்துள்ளதாக பேசும் ஸ்டாலின் அவர்களே ! உங்கள் தந்தையை நள்ளிரவில் கைது செய்தபோது இரவோடு இரவாக நீங்களும் உங்கள் மகனும் தமிழகத்தை விட்டே ஓடிவிட்டீர்கள். உங்கள் தந்தையை காத்தது பி ஜே பி அரசு, கோமாவில் இருந்த உங்கள் மாமா மாறனை இறக்கும் வரை மத்திய அமைச்சராகவே பாதுகாத்தது பி ஜே பி அரசுதான்’’ என்கிறார்.

’’அடக்கம் முடிந்த அடுத்த நொடியே நன்றி இல்லாமல் துரோகம் செய்தீர்கள். ஈழம் தொடங்கி தமிழகம் வரை தமிழர்களுக்கு தொடர் துரோகம் செய்து வரும் நீங்கள், ஜனநாயகம் குறித்தெல்லாம் பேசுவது வேடிக்கையானது’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.