×

ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டினால்… எடப்பாடியாருக்கு குருமூர்த்தி விடுக்கும் எச்சரிக்கை

எடப்பாடியில் தனியாக பிரச்சாரத்தை தொடங்கியதால் எழுந்த சலசலப்புக்கு பின்னர் ராயப்பேட்டையில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், அதன்பின்னரும் ஈபிஎஸ் மட்டுமே தமிழகமெங்கிலும் தனித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்ணன் -தம்பி என்று சொல்லும் ஓபிஎஸ் அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்வதில்லை. இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்வதையே கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். அரசு விளம்பரங்களில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுகிறார் என்ற பேச்சு எழுந்ததுமே, ஓபிஎஸ் தனது சாதனைகளை பட்டியலிட்டு தனியா விளம்பரம் கொடுக்க ஆரம்பித்தார். தனக்கென ஆதரவு
 

எடப்பாடியில் தனியாக பிரச்சாரத்தை தொடங்கியதால் எழுந்த சலசலப்புக்கு பின்னர் ராயப்பேட்டையில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், அதன்பின்னரும் ஈபிஎஸ் மட்டுமே தமிழகமெங்கிலும் தனித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்ணன் -தம்பி என்று சொல்லும் ஓபிஎஸ் அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்வதில்லை.

இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்வதையே கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்.

அரசு விளம்பரங்களில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுகிறார் என்ற பேச்சு எழுந்ததுமே, ஓபிஎஸ் தனது சாதனைகளை பட்டியலிட்டு தனியா விளம்பரம் கொடுக்க ஆரம்பித்தார். தனக்கென ஆதரவு சமுக வலைத்தளங்களையும் உருவாக்கினார். ஜல்லிக்கட்டு நாயகன் என்ற வீடியோ விளம்பரம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வந்தன.

நிலைமை விபரீதாமாகும் நிலையில், ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் இணையாக இருக்கும்படி நமது அம்மா நாளிதழில் விளம்பரங்கள் வெளிவந்தன. ஆனாலும், ஓபிஎஸ் தனித்து இருக்கிறார்.. தனித்து விடப்பட்டிருக்கிறார்.. என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், பிரதமரும் முதல்வருடன் மட்டும்10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதன் பின்னரும் கோவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் இணைந்து மேடையில் தோன்றினாலும், ஈபிஎஸ்சை ஓபிஎஸ் புகழ்ந்ததாலும் இருவருக்கும் இடையே தூரம் இல்லை என்று சொல்ல முடியாது என்றே பேச்சு இருக்கிறது.

இந்நிலையில், ‘’இந்தத் தேர்தல் கழகங்களுக்கு இடையே நடக்கும் வாழ்வா சாவா போட்டியே தவிர, கழகங்களின் தலைவர்களான ஸ்டாலின் -எடப்பாடி இடையே அல்ல. இதை உணர்ந்து திமுகவினர் செயல்படுவது போலத் தோன்றுகிறது. ஆனால் எடப்பாடி இந்த தேர்தலை தனக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான தேர்தல் ஆகவே பார்க்கிறார் என்று அதிமுக தலைவர்கள் சிலரே அங்கலாய்க்கின்றனர்’’ என்கிறார் துக்ளக் குருமூர்த்தி.

இது தொடர்பாக அவர் மேலும் தனது துக்ளக் இதழில் ‘எச்சரிக்கை’ என்றே தலைப்பிட்டு தெரிவித்திருப்பதாவது: ’’ஜெயலலிதா அளவுக்கு இல்லாத எடப்பாடி தன்னிச்சையாக அவர் போலவே செயல்படுகிறார் என்று அதிமுகவினர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது.

எடப்பாடியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்த பிறகும் அவர் தன்னை மட்டுமே முன்னிறுத்தி மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டிய அவசியமே இல்லை. சக தலைவர்களை ஒருங்கிணைப்பதற்கு பதில் எடப்பாடி தன்னை முன்னிறுத்துவதில் குறியாக இருப்பது அதிமுகவை தேர்தலில் நிச்சயம் பாதிக்கும்.

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்து ஊர்வலம் நடத்தியதை எடப்பாடி எதிர்கொண்ட விதம் அது போன்ற முக்கிய பிரச்சினைகளிலும் கூட கட்சியின் முக்கியத் தலைவர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை என்பதை அம்பலப்படுத்தியது வெளிப்படையாக தெரியும். இந்த உண்மைகளை உணர்ந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முறையை கடைப்பிடிப்பது அவருக்கும் நல்லது அதிமுகவுக்கும் நல்லது’’என்கிறார்.