×

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் – ஆதரவாளர்களிடம் சசிகலா பரபரப்பு பேச்சு

தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை என்றும், அன்புக்கு நான் அடிமை என்று எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார் சசிகலா. தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும், எல்லோரையும் விரைவில் சந்திப்பேன் என்றும் ஆதரவாளரிடம் பேசினார் சசிகலா. அன்புக்கு நான் எப்போதும் அடிமை; அடக்குமுறைக்கு அடிபணியமாட்டேன் என்று அழுத்தமாக கூறினார். ஜெயலலிதா நினைவிடம் ஏன் மூடப்பட்டிருக்கிறது என்கிற விசயம் மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் மனம் திறந்து பேசினார். விரைவில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேச
 

தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை என்றும், அன்புக்கு நான் அடிமை என்று எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார் சசிகலா. தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும், எல்லோரையும் விரைவில் சந்திப்பேன் என்றும் ஆதரவாளரிடம் பேசினார் சசிகலா.

அன்புக்கு நான் எப்போதும் அடிமை; அடக்குமுறைக்கு அடிபணியமாட்டேன் என்று அழுத்தமாக கூறினார். ஜெயலலிதா நினைவிடம் ஏன் மூடப்பட்டிருக்கிறது என்கிற விசயம் மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் மனம் திறந்து பேசினார்.

விரைவில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் தன்னை வரவேற்க குவிந்திருந்த ஆதரவாளர்களை அழைத்து காரில் இருந்தபடியே சசிகலா பேசினார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆதரவாளர்கள் சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.

காரில் அதிமுக கொடி கட்ட எதிர்ப்பு எழுந்ததால் காரை மாற்றி வேறோரு காரில் பயணம் செய்து வருகிறார் சசிகலா. சென்னை வந்ததும் அவர் நேரே ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் அங்கே தடை போடப்பட்டிருக்கிறது. சசிகலாவின் வருகைக்கும் வரவேற்புகும் காவல்துறை கடுமையாக கட்டுப்படுகளை விதித்திருக்கிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், வரும் வழியில் தன்னை வரவேற்ற ஆதரவாளர்களிடம் உருக்கமாக பேசினார் சசிகலா.