×

அதிமுகவில் அதிரடி மாற்றம்: ஈபிஎஸ்க்கு இணையாக ஓபிஎஸ்!

அதிமுகவின் அனைத்து விளம்பரங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி நிறைந்திருப்பதால் ’ஓரங்கட்ட படுகிறார் ஓபிஎஸ்’ என்ற பரபரப்பு பேச்சு எழுந்தது. அதற்கேற்றார்போல் ஓ. பன்னீர்செல்வம், தினமலரில் இரண்டு பக்க விளம்பரங்கள் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நினைத்தார். ’ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று இரண்டு பக்கங்களிலும் அவர் புராணமே இருந்தது. இது போதாது என்று ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓபிஎஸ்-ன் சாதனைகளைச் சொல்லும் வீடியோவும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் புகழ் பரப்பும் சமூக வலைத்தளங்களும் அதிரடியாக களமிறங்கின. அதிமுகவில் இப்படி ஒருவரை ஒருவர்
 

அதிமுகவின் அனைத்து விளம்பரங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி நிறைந்திருப்பதால் ’ஓரங்கட்ட படுகிறார் ஓபிஎஸ்’ என்ற பரபரப்பு பேச்சு எழுந்தது. அதற்கேற்றார்போல் ஓ. பன்னீர்செல்வம், தினமலரில் இரண்டு பக்க விளம்பரங்கள் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நினைத்தார். ’ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று இரண்டு பக்கங்களிலும் அவர் புராணமே இருந்தது. இது போதாது என்று ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓபிஎஸ்-ன் சாதனைகளைச் சொல்லும் வீடியோவும் வெளியிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் புகழ் பரப்பும் சமூக வலைத்தளங்களும் அதிரடியாக களமிறங்கின. அதிமுகவில் இப்படி ஒருவரை ஒருவர் உயர்த்திக்கொள்ள நினைத்து வந்த விளம்பரங்களில் விளம்பரங்களினால் கட்சியினரிடையே சலசலப்பு இருந்தது.

அண்ணன் தம்பிக்குள் இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம் என்று ஓபிஎஸ் சொன்னபோது, அண்ணன் யார்? தம்பி யார்? என்பதுதானே பிரச்சனை என்று எதிர்தரப்பினர் கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் சசிகலா விடுதலையாகி வந்து அதிமுகவை கைப்பற்றுவார் என்ற பேச்சு எழுந்திருக்கும் சூழ்நிலையில், அதிமுகவின் கொடியை தனது காரில் கட்டி பெரும் சர்ச்சையை, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு இணையாக ஓ. பன்னீர்செல்வத்தையும் அதிமுகவின் விளம்பரங்களில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.

12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். பக்கம் பக்கமாக வெளிவந்துள்ள அந்த விளம்பரங்களில் வெற்றி நடை போடும் தமிழகமே என்ற வாசகம் கொண்ட அந்த விளம்பரங்களில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இணையாக ஓபிஎஸ் படங்களும் ஒவ்வொரு விளம்பரத்திலும் இடம்பெற்றுள்ளது.

எல்லா விளம்பரங்களிலும் ஓபிஎஸ் இடம்பெற்றுள்ளது, அதிமுகவின் இந்த திடீர் மாற்றம் , அதிரடி மாற்றம் சசிகலாவின் விடுதலை.. தமிழக வருகை என்பதால் நடந்த மாற்றமா என்ற கேள்வி்யை எழுப்பி இருக்கிறது.

அதிமுகவின் இணையதளங்களிலும் ஈபிஎஸ்க்கு – ஓபிஎஸ் படங்கள் இடம்பெற்றுள்ளன.