×

எப்படி மதிப்பாங்க? எப்படி கொடுப்பாங்க? நிர்வாகிகளிடம் புலம்பிய ப.சிதம்பரம்

இருபது சீட்டுக்கு மேல் ஏறி வர முடியாது என்று திமுக கறார் காட்டுவதால் கவலையில் இருக்கிறது காங்கிரஸ். கூட்டணியில் தொடர்வதா வெளியேறுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறது. இந்நிலையில் நாற்பத்தி ஒரு சீட்டு வாங்கி அதில் எட்டில் மட்டும் ஜெயித்தால் எப்படித்தான் சீட்டு கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேட்டிருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் காங்கிரஸ் வடக்கு வட்டாரத்தின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசியபோது
 

இருபது சீட்டுக்கு மேல் ஏறி வர முடியாது என்று திமுக கறார் காட்டுவதால் கவலையில் இருக்கிறது காங்கிரஸ். கூட்டணியில் தொடர்வதா வெளியேறுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறது.

இந்நிலையில் நாற்பத்தி ஒரு சீட்டு வாங்கி அதில் எட்டில் மட்டும் ஜெயித்தால் எப்படித்தான் சீட்டு கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேட்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் காங்கிரஸ் வடக்கு வட்டாரத்தின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்துப் பேசியபோது, காங்கிரஸ் கட்சியில் டெல்லி ஆக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி இளைஞர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும். மூத்தவர்கள் வழிகாட்ட வேண்டும்.

மற்ற கட்சிகள் பிரச்சாரம் துவங்கி விட்ட நிலையிலும் நாம் இன்னும் பூத் கமிட்டி நிலையிலேயே இருக்கிறோம். நம் கட்சியின் பலம் மாற்றுக் கட்சிக்கு கூட தெரிந்துவிடுகிறது. ஆள் குறைவாக இருந்தால் கூட்டணிக் கட்சிகள் எப்படித்தான் மதிப்பார்கள். கூட்டணியில் கடந்த முறை நாற்பத்தி ஒரு சீட்டு வாங்கி அதில் எட்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலைமையில் எப்படி நம்மை மதித்து சீட்டு கொடுப்பார்கள். இதை உணர்ந்து நிர்வாகிகள் கட்சிக் கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும். முதலில் காங்கிரஸார் எல்லோரும் தங்கள் வீட்டு பையன்களை கட்சியில் சேர்க்க வேண்டும். அவர்கள் மூலமாக இளைஞர்கள் பட்டத்தையும் இணைக்க வேண்டும்’’ என்றார்.