×

’’காரில் கொடிக்கே இவ்வளவு அலறல் என்றால், என்னமோ நடக்கப் போகுது…’’

டிஜிபியிடம் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புகார்! அந்த அதிகாரியிடம் முதல்வரையும் அழைத்து போயிருந்தால் பிரமாதமாக இருந்திருக்குமே! காரில் கொடிக்கே இவ்வளவு அலறல் என்றால், என்னமோ நடக்கப் போகுது என்கிறார் மூத்த அரசியல் விமர்சகர். சசிகலா பெங்களூரு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரிசார்ட்டுக்கு ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார். அந்தக் காரில் அதிமுகவின் கொடி சொருகி வைக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவைக் கைப்பற்றப் போவதற்கான சமிக்ஞையாக சசிகலா கூறுகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். சசிகலா காரில் கொடி
 

டிஜிபியிடம் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புகார்! அந்த அதிகாரியிடம் முதல்வரையும் அழைத்து போயிருந்தால் பிரமாதமாக இருந்திருக்குமே! காரில் கொடிக்கே இவ்வளவு அலறல் என்றால், என்னமோ நடக்கப் போகுது என்கிறார் மூத்த அரசியல் விமர்சகர்.

சசிகலா பெங்களூரு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரிசார்ட்டுக்கு ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார். அந்தக் காரில் அதிமுகவின் கொடி சொருகி வைக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவைக் கைப்பற்றப் போவதற்கான சமிக்ஞையாக சசிகலா கூறுகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

சசிகலா காரில் கொடி கட்டியதற்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாநகர காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் டிஜிபி அலுவலகத்துக்குச் சென்றனர். சசிகலா காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக சார்பில் புகாரளித்துள்ளனர்.

அமைச்சர்களும், அதிமுகவின் சீனியர்களும் திரண்டு சென்று புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து, ’’டிஜிபியிடம் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புகார்! அந்த அதிகாரியிடம் முதல்வரையும் அழைத்து போயிருந்தால் பிரமாதமாக இருந்திருக்குமே! காரில் கொடிக்கே இவ்வளவு அலறல் என்றால், என்னமோ நடக்கப் போகுது’என்கிறார் அருணன்