×

ஒரு அடிதடிக்கலவரம் ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்கு சமம்… கமல்

ஒரு மேடைப்பேச்சு ஆயிரம் கட்டுரைகளுக்கு சமம். ஒரு அடிதடிக்கலவரம் ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்கு சமம் என்கிறார் ஹிட்லர். இங்கு ஹிட்லரின் வாரிசுகள் உண்டு. தேர்தல் சமயத்தில் எப்படியாவது பிற மதத்தவரின் உணர்ச்சிகளை தூண்டி, மதக்கலவரங்களை உருவாக்கி, வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சிகள் இங்கும் நிகழ்கின்றன. சமத்துவமும் சமூநீதியும் பேசும் தமிழகத்தில் உங்கள் சதித்திட்டங்கள், எம் மக்களின் சகோதரத்துவத்தால் என்றென்றும் முறியடிக்கப்படும் மூடர்களே என்று தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு,
 

ஒரு மேடைப்பேச்சு ஆயிரம் கட்டுரைகளுக்கு சமம். ஒரு அடிதடிக்கலவரம் ஆயிரம் மேடைப் பேச்சுகளுக்கு சமம் என்கிறார் ஹிட்லர். இங்கு ஹிட்லரின் வாரிசுகள் உண்டு. தேர்தல் சமயத்தில் எப்படியாவது பிற மதத்தவரின் உணர்ச்சிகளை தூண்டி, மதக்கலவரங்களை உருவாக்கி, வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சிகள் இங்கும் நிகழ்கின்றன.

சமத்துவமும் சமூநீதியும் பேசும் தமிழகத்தில் உங்கள் சதித்திட்டங்கள், எம் மக்களின் சகோதரத்துவத்தால் என்றென்றும் முறியடிக்கப்படும் மூடர்களே என்று தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு, ‘’எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்.’’என்று தெரிவித்திருந்த கமல்ஹாசன், இப்படியொரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் காரசாரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜகவினர் மேடைகளில் பேசி அது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும்நிலையில், கமல்ஹாசன் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.