×

முள்வேளி..இரும்பு வேலி.. கான்கிரீட் தடுப்புகள்.. இந்த தீவிரத்தை ஏன் மீனவர்களை காப்பதில் காட்டுவதில்லை? கனிமொழி

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி வடமாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசு அவர்களுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்து விவசாயிகள் போராட்டம் வேறு திசைக்கு திசை திருப்பப்பட்டது. பல விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மீண்டும் ஆறாம்
 

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி வடமாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசு அவர்களுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உடன்பாடு எட்டவில்லை.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்து விவசாயிகள் போராட்டம் வேறு திசைக்கு திசை திருப்பப்பட்டது. பல விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மீண்டும் ஆறாம் தேதி தேசிய அளவில் விவசாயிகள் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் அதிக அளவில் வரக்கூடும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி டெல்லி எல்லைக்குள் அதிக அளவில் விவசாயிகள் வர விடாமல் தடுப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கனிமொழி எம்.பி., ’’விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளைத் தடுக்க முள்வேலி, கூர்மையான இரும்பு வேலி, கான்கிரீட் தடுப்புகள் டெல்லியைச் சுற்றி அமைக்கப்படுகின்றன. நமது விவசாயிகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு, இலங்கை கடற்படையிடமிருந்து நமது மீனவர்களை ஏன் பாதுகாப்பதில்லை?’’என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

விவசாயிகளுக்கு எதிராக காட்டும் இந்த தீவிரத்தை ஏன் மீனவர்களை காப்பதில் காட்டுவதில்லை? என்று கேட்டிருக்கிறார்.