×

நடன இயக்குநர் கலா பாஜகவில் இணைந்தார்

பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் மதுரை பயணத்தின்போது அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம் வரிசையில் பாஜகவில் சேர்ந்திருக்கும் திரையுலக பெண் பிரபலம் கலா. ராதாரவி, விஜயகுமார், எஸ்.வி.சேகர், பொன்னம்பலம், கங்கை அமரன் என்று திரையுலகின் ஆண் பிரபலங்களின் அணிவகுப்பும் தொடர்கின்றன. பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுடன் கலா இருக்கும் புகைப்படங்களையும் கலாவும், வானதி சீனிவாசனும் தங்களது டுவிட்டர்
 

பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் மதுரை பயணத்தின்போது அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம் வரிசையில் பாஜகவில் சேர்ந்திருக்கும் திரையுலக பெண் பிரபலம் கலா. ராதாரவி, விஜயகுமார், எஸ்.வி.சேகர், பொன்னம்பலம், கங்கை அமரன் என்று திரையுலகின் ஆண் பிரபலங்களின் அணிவகுப்பும் தொடர்கின்றன.

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுடன் கலா இருக்கும் புகைப்படங்களையும் கலாவும், வானதி சீனிவாசனும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.