×

அதிமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் எப்படி அதற்கு இணங்கினர்? திருமாவளவன் அதிர்ச்சி

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இதை கண்டித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். இதனால் உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜன் மற்றும் வட்டாட்சியர் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து, நகராட்சி ஊழியர்களை கொண்டு, பிரச்சனைக்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை எடுத்து சென்றனர். மேலும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அங்கிருந்த அனைத்து கட்சி கொடி கம்பங்களூம் வட்டாட்சியர்,
 

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இதை கண்டித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜன் மற்றும் வட்டாட்சியர் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து, நகராட்சி ஊழியர்களை கொண்டு, பிரச்சனைக்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை எடுத்து சென்றனர். மேலும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அங்கிருந்த அனைத்து கட்சி கொடி கம்பங்களூம் வட்டாட்சியர், டிஎஸ்.பி. முன்னிலையிலேயே அகற்றப்பட்டன.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘’உசிலம்பட்டியில் இன்று (சன-28)விசிக கொடியை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். அத்துடன், அங்கே பறந்த அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன. சாதிவெறியர்களின் நெருக்கடிக்கு அதிகாரிகள் பணிவது வாடிக்கையே! ஆனால், ஆளுங்கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் எப்படி அதற்கு இணங்கினர்?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.