×

ஒன்ஸ்மோர் கேட்ட மூத்த நிர்வாகி; கடுப்பான ராகுல்

விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் தமிழக காங்கிரசார் களம் இறங்கியிருக்கிறார்கள். ராகுல்காந்தி அதற்கு ஈடுகொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். ‘வாங்க, ஒரு கை பார்போம்’ என்று கடந்த மூன்று நாட்களாக கோவை, ஈரோடு, கரூர் என்று பிரச்சாரத்தில் கலக்கி எடுத்து வருகிறார் ராகுல். எளிமையான அணுகுமுறைகளால் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறார் ராகுல். மக்கள் தன் மீது காட்டும் அன்பையும், தனக்கு வரவேற்பையும் பார்த்து மகிழ்ச்சியில் இருக்கிறார் ராகுல். ஆனாலும் மொழிப்பிரச்சனை மட்டும்தான் அவ்வப்போது அவரை அப்செட்
 

விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் தமிழக காங்கிரசார் களம் இறங்கியிருக்கிறார்கள். ராகுல்காந்தி அதற்கு ஈடுகொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். ‘வாங்க, ஒரு கை பார்போம்’ என்று கடந்த மூன்று நாட்களாக கோவை, ஈரோடு, கரூர் என்று பிரச்சாரத்தில் கலக்கி எடுத்து வருகிறார் ராகுல்.

எளிமையான அணுகுமுறைகளால் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறார் ராகுல். மக்கள் தன் மீது காட்டும் அன்பையும், தனக்கு வரவேற்பையும் பார்த்து மகிழ்ச்சியில் இருக்கிறார் ராகுல். ஆனாலும் மொழிப்பிரச்சனை மட்டும்தான் அவ்வப்போது அவரை அப்செட் ஆக்கிவிடுகிறது.

ராகுலின் பேச்சை மொழிப்பெயர்க்க நிலையாக ஒரு சரியான நபரை தேர்ந்தெடுத்திருந்தால், ராகுல் இந்த அளவுக்கு கடுப்பாகி இருந்திருக்க மாட்டார்.

முதல்நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிதான் ராகுலின் பேச்சை மொழி பெயர்த்தார். ராகுலின் பேச்சை மொழி பெயர்ப்பதில் கொஞ்சம் தடுமாறினார் அழகிரி. அதில் ராகுல் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார். அடுத்ததாக, ராகுல் சொன்னது புரியாமல், மறுபடியும் சொல்லுங்கள் என்று அழகிரி கேட்கவும் கடு கடு முகத்துடன் மறுபடியும் சொன்னார் ராகுல். இதே மாதிரி இரண்டு முறை அழகிரி, ராகுல் சொன்னதையே திரும்ப சொல்லச்சொல்லவும் கடுப்பாகிவிட்டார் ராகுல்.

இதை புரிந்தகொண்ட நிர்வாகிகள், அடுத்து பேராசிரியர் ஒருவரை மொழிபெயர்க்க நியமித்தார்கள். அவரும் தடுமாறியதைக்கண்டு ராகுல் கடும் அப்செட். இதில் மயக்கம் போட்டு விழுந்துவேறு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

நல்ல வேளையாக, ஈரோட்டில் நெசவாளர்களுடன் கலந்துரையாடியபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் லட்சுமி கை கொடுத்தார். அவரின் மொழிபெயர்ப்பில் ராகுல் கொஞ்சம் நிம்மதி அடைந்தார். அடுத்து இம்ரான். அவரது மொழிபெயர்ப்பிலும் ராகுல் திருப்தி அடைந்தார். இன்றைக்கு கரூர் பிரச்சாரத்தில் ஜோதிமணி மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். தங்கபாலுவும் பிரச்சார கூட்டங்களில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒரே ஆளாக இல்லாததால் அடிக்கடி ஆள் மாறுவதால் ராகுல்காந்தியாலும் சரியாக புரிந்துகொண்டு பேசமுடியாமல் போகிறது.

ராகுல்காந்தியை அழைத்து வந்து இத்தனை பரபரப்பாக பிரச்சாரத்தை தொடங்கியிருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஒரு சரியான மொழி பெயர்ப்பாளரை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருக்காதது ஏன்? என்ற கேள்வி காங்கிரசார் இடையே எழுந்திருக்கிறது.