×

ராமதாசின் சீட் பேரம்.. திமுக சீனியர் எம்.எல்.ஏ. ஆவேசம்

வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி பாமக இரண்டு மாதங்களாக ஐந்து கட்ட போராட்டம் நடத்தி வருகிறது. வரும் 29ம் தேதி இறுதிக்கட்ட போராட்டத்தினை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திமுகவின் சீனியர் இப்படி சீறியிருப்பது இரு கட்சி வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாமகவின் இந்த போராட்டம் தேர்தல் நாடகம் என்றும், சீட் பேரம் பேசுவதற்காக ராமதாஸ் நடத்தும் நாடகம் என்றும் திமுகவின் சீனியர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். கடலூர் கிழக்கு
 

வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி பாமக இரண்டு மாதங்களாக ஐந்து கட்ட போராட்டம் நடத்தி வருகிறது. வரும் 29ம் தேதி இறுதிக்கட்ட போராட்டத்தினை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திமுகவின் சீனியர் இப்படி சீறியிருப்பது இரு கட்சி வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாமகவின் இந்த போராட்டம் தேர்தல் நாடகம் என்றும், சீட் பேரம் பேசுவதற்காக ராமதாஸ் நடத்தும் நாடகம் என்றும் திமுகவின் சீனியர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ‘’ வன்னியர்களிடையே பாமக நம்பிக்கையை இழந்துவிட்டது. அதனால்தான் அம்மக்களிடையே நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தினை கையில் எடுத்திருக்கிறார் ராமதாஸ். இது ராமதாஸ் நடத்தும் தேர்தல் நாடகம்தான். சீட் பேரம் பேசுவதற்காக ராமதாஸ் நடத்தும் நாடகத்தை வன்னியர்களும் நன்கு அறிவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’வன்னியர்களுக்காக அதிக நன்மைகள் செய்தது திமுகதான். பல ஆயிரக்கணக்கான வன்னியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திமுகதான் ரத்து செய்தது’’என்று தெரிவித்துள்ளவர்,

‘’வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தினை ரத்து செய்ததும் திமுகதான்’’ என்று வன்னியர் சமுதாயத்திற்காக திமுக செய்ததை பட்டியலிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக திமுகவுடனும் கூட்டணி பேசி வருவதாக சொல்லப்படும் நிலையில், திமுகவின் சீனியர் இப்படி சீறியிருப்பது இரு கட்சி வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.