×

ஊர்ஜிதமான சசிகலா உறவினர்களின் சந்தேகம்! அமமுகவினர் கவலை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகுதான் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது என்றார்கள். முன்னதாக எடுக்கப்பட்ட ரேபிட் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது என்றார்கள். ஆனாலும் மூச்சுத்திணறல் அதிகமானதால், நேற்று அவர் ஆம்புலன்ஸ்
 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகுதான் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது என்றார்கள். முன்னதாக எடுக்கப்பட்ட ரேபிட் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது என்றார்கள்.

ஆனாலும் மூச்சுத்திணறல் அதிகமானதால், நேற்று அவர் ஆம்புலன்ஸ் மூலமாக சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை சக்கர நாற்காலில் அமரவைத்து அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின்னரும் மூச்சுத்திணறல் அதிகமானதால், ஸ்டெச்சரில் வைத்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டு சென்றனர். ஆக்சிஜன் சிகிச்சை அளித்தனர்.

சசிகலாவின் உறவினர்கள் விவேக், ஜெயானந்த், உதவியாளர் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமைக்கு விரைந்தனர். ஆனாலும் அவர்களை சசிகலாவை சந்திக்க சிறைத்துறை மறுத்தது. மேலும், சசிகலாவின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வழங்கவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்தனர். நடைமுறையை காரணம் காட்டியே சிறை நிர்வாகமும், மருத்துவமனையும் காலம் கடத்துகிறது என்றும், சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ள நிலையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், சசிகலாவின் தம்பி மகன் ஜெயானந்த் குற்றம் சாட்டினார்.

சசிகலாவுக்கு சாதாரண எக்ஸ்ரே மட்டும் எடுத்து பார்த்திருக்கிறார்கள். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தால்தான் உடல்நிலை குறித்து தெரியவரும். அந்த சி.டி. ஸ்கேன் எடுக்க அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அதற்கு கோர்ட் அனுமதி வழங்க வேண்டும். சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும் என்றார் ஜெயானந்த்.

மேலும், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், தைராய்டு, நீழிவு பிரச்சனைகளும் உள்ளன. அதனால் அவரை எங்களை சார்ந்த மருத்துவர்களும் கண்காணிக்க அனுமதி கோரினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகே, சசிகலாவை பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த சோதனையில் உறவினர்கள் சந்தேகப்பட்டது மாதிரியே கொரோனா தொற்று உறுதியானது.

விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. ரத்த அழுத்தம், தைராய்டு, நீழிவு பிரச்சனைகளும் நுரையீரலில் சளி அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் அளவு நேற்று மாலை 98 ஆக இருந்த நிலையில் இன்று 95 என்ற அளவில் இருக்கிறது. மேலும் கடும் நிமோனியா காய்ச்சல் வேறு சசிகலாவை வாட்டி வருகிறது.

சசிகலாவை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், சசிகலாவின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்ற அச்சம் இருக்கிறது. எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்துவருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எது வரை பாய்ந்தது என்றே தெரியவில்லை என்று சசிகலாவின் தம்பி திவாகரன் அச்சம் தெரிவித்திருந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் அமமுமவினரை கவலை அடைய செய்திருக்கிறது.