×

நான்கு கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்திய அழகிரி!

நான் முதல்வராக வருகிறேனோ இல்லையோ ஆனால் ஸ்டாலின் வரமுடியாது. எனது ஆதரவாளர்களும் வர விடமாட்டார்கள் என்று மதுரையில் நடந்த ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் சபதம் போட்டவர் மு.க.அழகிரி. ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி வைக்கலாம் என்று இருந்தவருக்கு ரஜினி கட்சி தொடங்கவில்லை என்றதும், அவரது மன்றத்து நிர்வாகிகள் நிறைய உறுப்பினர்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதை அப்படியே தன் பக்கம் இழுத்துக்கொள்ளலாம் என்று அழகிரி நினைத்த அழகிரி, அதற்கான வேலைகளிலும் தீவிரம் காட்டி வந்திருக்கிறார். அழகிரி போட்ட
 

நான் முதல்வராக வருகிறேனோ இல்லையோ ஆனால் ஸ்டாலின் வரமுடியாது. எனது ஆதரவாளர்களும் வர விடமாட்டார்கள் என்று மதுரையில் நடந்த ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் சபதம் போட்டவர் மு.க.அழகிரி.

ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி வைக்கலாம் என்று இருந்தவருக்கு ரஜினி கட்சி தொடங்கவில்லை என்றதும், அவரது மன்றத்து நிர்வாகிகள் நிறைய உறுப்பினர்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதை அப்படியே தன் பக்கம் இழுத்துக்கொள்ளலாம் என்று அழகிரி நினைத்த அழகிரி, அதற்கான வேலைகளிலும் தீவிரம் காட்டி வந்திருக்கிறார்.

அழகிரி போட்ட சபதத்தால் ஆடிப்போன ஸ்டாலின், திமுகவினர் அவர் பக்கம் போகாமல் தக்க வைக்க பல முயற்சிகளையும் எடுத்துக்கொண்டு, ரஜினி ரசிகர்களையும் தங்கள் பக்கம் இழுத்து, மாநில அளவில் பொறுப்பும் வழங்கி தடாலடி காட்டிவருகிறார்.

இதனால் அதிர்ச்சிக்கு ஆளான அழகிரி, இனியும் தாமதம் ஆகாது என்று , புதிய தமிழகம், புரட்சி பாரதம், இந்திய குடியரசு கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் ஆகிய நான்கு கட்சிகளை அழைத்து ரகசியமாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். மேலும் சில கட்சிகளுடனு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கிறார்கள் பாண்டிய மண்டலத்து திமுகவினர்.

வரும் 30ம் தேதி தனது பிறந்தநாளில் கட்சி அறிவிப்பை வெளியிட இருக்கிறார் அழகிரி என்றும் சொல்கிறார்கள். கட்சி தொடங்கி ஆதரவை தேடுவதை விட, முன்னாதாகவே ஆதரவினை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறார். மேலும், திமுகவில் அதிருப்தியில் இருப்போரை தன் பக்கம் இழுத்துவிடலாம் என்றும், அவர்களாகவே தன் பக்கம் ஓடிவந்துவிடுவார்கள் என்றும் கணக்கு போடுகிறாராம் அழகிரி.