×

சசிகலாவின் உடல்நிலை… டிடிவி தினகரனுக்கு சிறைத்துறை சொன்ன தகவல்

சசிகலா நலமுடன் இருக்கிறார் என்றும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், உடல்நிலை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறியதாக சிறைத்து மூலமாக தகவல் வந்துள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன். ஆனாலும் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எங்கள் மருத்துவர்களுடன் பேசிவிட்டால் பிரச்சனை இல்லை என்கிறார் தினகரன். சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை தேவையா? இல்லையா? என்பதை அவருக்கு சிகிச்சை அளிக்கும்
 

சசிகலா நலமுடன் இருக்கிறார் என்றும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், உடல்நிலை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறியதாக சிறைத்து மூலமாக தகவல் வந்துள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன். ஆனாலும் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எங்கள் மருத்துவர்களுடன் பேசிவிட்டால் பிரச்சனை இல்லை என்கிறார் தினகரன்.

சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை தேவையா? இல்லையா? என்பதை அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே முடிவு செய்துகொள்வார்கள் என்றும் சிறைத்துறை தெரிவித்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சசிகலா அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் உறவினர்கள் விவேக், ஜெயானந்த், உதவியாளர் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனாலும் அவர்களை சசிகலாவை சந்திக்க சிறைத்துறை மறுத்திருக்கிறது. மேலும், சசிகலாவின் உடல்நிலை குறித்தும் அதிகாரப்பூர்வமான தகவல் வழங்கவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் தங்களால் சந்திக்க முடியவில்லை என்றும், சசிகலாவின் சிகிச்சைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை. வாய்வழியாகவே தகவல் தெரிவிக்கிறார்கள் என்றும் உறவினர்கள் புகார் சொல்லி வந்தனர்.

மேலும், சசிகலாவுக்கு சாதாரண எக்ஸ்ரே மட்டும் எடுத்து பார்த்திருக்கிறார்கள். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தால்தான் உடல்நிலை குறித்து தெரியவரும். அந்த சி.டி. ஸ்கேன் எடுக்க அங்கே வசதி இல்லாததால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அதற்கு கோர்ட் அனுமதி வழங்க வேண்டும். சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும் என்றார் ஜெயானந்த்.

சசிகலாவின் உயிருக்கு ஆபத்தோ என்ற அச்சத்தை தெரிவித்திருந்தார் அவரது தம்பி திவாகரன்.

இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக சிறைத்துறை தகவல் அளித்திருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும், அச்சப்பட தேவையில்லை என்றும், சி.டி. ஸ்கேன் குறித்து மருத்துவர்களே முடிவு செய்துகொள்வார்கள் என்றும் சிறைத்துறை தெரிவித்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எங்கள் மருத்துவர்களுடன் பேசிவிட்டால் பிரச்சனை இல்லை என்கிறார் தினகரன்.