×

தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலா! ஸ்டெச்சரில் வைத்து கொண்டு செல்லப்பட்டார்

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சசிகலா. சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச்செல்லப்பட்ட சசிகலா, பின்னர் நிலைமை மோசமானதும் ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு சென்றனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா இன்னும் 6 நாட்களில் விடுதலை ஆகவிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாகவே சளி, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்து வந்துள்ளது. நேற்று மூச்சுத்திணறல் அதிகமாகவே மருத்துவர்கள் வந்து கவனித்துள்ளனர். அதிலும் சரியாகாமல் போகவே
 

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சசிகலா.

சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச்செல்லப்பட்ட சசிகலா, பின்னர் நிலைமை மோசமானதும் ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு சென்றனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா இன்னும் 6 நாட்களில் விடுதலை ஆகவிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாகவே சளி, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்து வந்துள்ளது. நேற்று மூச்சுத்திணறல் அதிகமாகவே மருத்துவர்கள் வந்து கவனித்துள்ளனர். அதிலும் சரியாகாமல் போகவே அவர் அங்கிருந்து பெங்களூரு போரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் அவரை சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே, சக்கர நாற்காலியில் வைத்து சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனையுடன் சளி, காய்ச்சலும் அதிகம் இருப்பது தெரியவந்தது. ஆகிஸிஜன் அளவும் குறைவாகவே இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னரும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரை ஸ்ட்டெச்சரில் வைத்து தூக்கொண்டு சென்று தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர்.

அங்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.