×

’’எல்லோரும் உறவோடுதான் இருந்தோம்; இனிமேல்..’’ என்று இழுத்த அமைச்சர்

சசிகலாவுக்கு ஆதரவாகவே பேசி வந்த அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டிருக்கிறார். சசிகலாவின் வருகை குறித்து, மீண்டும் அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, ‘’ஜெயலலிதா இருந்தபோது எல்லோரும் உறவோடுதான் இருந்தோம். இனிமேல்.. என்று இழுத்தவர், இனிமேல் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக நின்று உழைப்போம்’’என்றார். மதுரை ஆரப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி
 

சசிகலாவுக்கு ஆதரவாகவே பேசி வந்த அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டிருக்கிறார்.

சசிகலாவின் வருகை குறித்து, மீண்டும் அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, ‘’ஜெயலலிதா இருந்தபோது எல்லோரும் உறவோடுதான் இருந்தோம். இனிமேல்.. என்று இழுத்தவர், இனிமேல் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக நின்று உழைப்போம்’’என்றார்.

மதுரை ஆரப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ இதில் பங்கேற்று மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

பின்னர், அதிமுக மீது திமுக தலைவர் ஸ்டாலின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, ஸ்டாலின் எதைத்தான் சொல்லவில்லை. அவர் சொல்லுவது எல்லாம் அவச்சொல்தான் என்றார்.