×

ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் – கசியும் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது என்று தகவல் கசிந்திருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் வருமா? வராதா? என்ற கேள்வி இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்தல் வருவதாக தகவல். அதிமுக அரசின் பதவிக்காலம் மே -25ம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்திவிட தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருக்கிறது. அதனால்தான் வாக்காளர் பட்டியல் வேலைகளில் தீவிரம் காட்டி வந்து இன்றைக்கு இறுதி வாக்காளர்கள் பட்டியலை அறிவித்திருகிறது. மே, ஜூன் மாதங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள்
 

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது என்று தகவல் கசிந்திருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் வருமா? வராதா? என்ற கேள்வி இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்தல் வருவதாக தகவல்.

அதிமுக அரசின் பதவிக்காலம் மே -25ம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்திவிட தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருக்கிறது. அதனால்தான் வாக்காளர் பட்டியல் வேலைகளில் தீவிரம் காட்டி வந்து இன்றைக்கு இறுதி வாக்காளர்கள் பட்டியலை அறிவித்திருகிறது.

மே, ஜூன் மாதங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் இருப்பதால் ஏப்ரலிலேயே தேர்தலை நடத்திவிடலாம் என்றும், ஏப்ரல் 15ல் ரம்ஜான் தொடங்குவதால் அதற்கு முன்னதாகவே, அதாவது ஏப்ரல் முதல் வாரத்திலேயே தேர்தலை நடத்தி விடுவது என்றும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாம்.

தமிழகம், புதுச்சேரியில் ஒரேகட்டமாக தேர்தலை நடத்திவிட்டு, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் 3 கட்டமாக தேர்தலை நடத்தலாம் என்றும் முடிவெடுத்திருக்கிறதாம் தேர்தல் ஆணையம்.