×

2021 ஆம் ஆண்டும் இவரோட ஆட்சி?.. சட்டப்பேரவையில் எகிறியதற்குக் காரணம் இதுதானாம்!

வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சியினரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர் வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சியினரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தான். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு இரண்டாகப் பிளவுபட்ட அதிமுக வரப்போகும் தேர்தலை எப்படி எதிர்நோக்கப் போகிறது என்றும் ஒரே பேச்சாக இருக்கிறது. இதனிடையே மு.க ஸ்டாலின் 2021 ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இப்படி
 

வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சியினரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்

வரும் 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சியினரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தான். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு இரண்டாகப் பிளவுபட்ட அதிமுக வரப்போகும் தேர்தலை எப்படி எதிர்நோக்கப் போகிறது என்றும் ஒரே பேச்சாக இருக்கிறது. இதனிடையே மு.க ஸ்டாலின் 2021 ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இப்படி இந்த இருபெரும் துருவங்களான திமுக வெல்லுமா.. அதிமுக வெல்லுமா என்ற கேள்வி நீண்ட காலமாக எழுந்து வருகிறது. 

முதல்வர் ஆனதில் இருந்து சாந்தமான உருவத்துடன், எப்போதுமே முகத்தில் சிரிப்புடன் பேட்டியளித்து வந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் ஆவேசத்துடன்  பேசியது திமுகவினரைக் கதிகலங்கச் செய்தது. அதிமுக அமைச்சர்களும் எடப்பாடியின் புது முகத்தைப் பார்த்து மிரண்டு போயினர். இப்படி திடீரென ஆவேசம் பொங்க, சட்டசபை அதிரும் படி பேசியதன் பின்னணி என்ன என்பதற்கு அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் ஒரு பதில் சொல்லியிருக்கிறார்கள். 

அதாவது முதல்வர் ஒரு ஜோசியரைச் சந்தித்த போது, அவர் 2021 ஆம் ஆட்சியிலும் அதிமுக அரசு தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் மு.க ஸ்டாலினுக்கு அந்த யோகம் இல்லை என்றும் கூறினாராம். ஏற்கனவே ஒரு முறை எம்எல்ஏ, பிறகு அமைச்சர், அப்படியே முதலமைச்சர் ஆகி விடுவாய் என்று ஜோசியர் சொன்னது பலித்ததை போல வரப்போகும் தேர்தலிலும் அது தான் நடக்கும் என்று எண்ணி சாதுவாக இருந்த எடப்பாடி இப்போது  குஷியாகி மாறி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறாராம். அதனால் தான் இப்போதெல்லாம் எடப்பாடி பேட்டியளிக்கும் போது, திமுகவை விமர்சிக்கும் தோணி மாறியிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள். 

ஆக மொத்தத்தில் கூட்டணியைப் பலப்படுத்துவது, அடிக்கடி அதிமுகவினருடன் கூட்டம் கூட்டுவது என எளிமை என்னும் அடையாளத்தை மீண்டும் சூட்டிக் கொண்டு புதுச்சக்தியுடன் தேர்தலை எதிர்கொள்ளக் களமிறங்கியிருக்கிறார்… கட்சியினரின் யூகம் எதுவாக இருந்தாலும் ஆட்சி மக்கள் கையில் இருப்பதால்.. யார் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் !