×

20 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஓபிஎஸ் திட்டவட்டம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிடும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார் சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிடும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்
 

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிடும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிடும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

இதனால், அந்த 18 தொகுதிகள் உள்பட ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளன. திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேசமயம், தகுதி நீக்கத்திற்கு எதிராகத் தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் 18 தொகுதிகளுக்கும் அதனுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும், இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கத்தால் காலியாக உள்ள தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தித்யாலர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என திட்டவட்டம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், 20 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களது பணிக்களை தொடங்கியுள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றார்.

அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுத்தது குறித்து பேசிய அவர், பிரண்டு சென்றவர்களுக்கு அழைப்பு விடுத்தது பெருந்தன்மை. அதனை அவர்கள் ஏற்பதும், ஏற்காததும் அவர்களது மனநிலை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.