×

அழகிரியின் இலக்கு -20! திமுகவுக்கு இழப்பு 20+5!

200ஐ இலக்கு வைத்து ஸ்டாலின் ஓடிக்கொண்டிருக்கும்போது, 20 ஐ இலக்கு வைத்து ஓடத் தயாராகி விட்டார் அழகிரி. தான் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்று தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்வார்கள் என்று இருந்த நிலையில், திமுகவினர் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருவதோடு அல்லாமல், திமுக நிர்வாகிகள் கூட்டமும் நடந்து முடிந்துவிட்டதால்தான் உறுதியாக களம் இறங்கி இருக்கிறாராம் அழகிரி. பொறுத்து பொறுத்து பார்த்த அழகிரி, தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக மா.செ., ஒ.செ.,க்களூடன் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனையிலும் ஈடுபட்டதால், இதற்கு
 

200ஐ இலக்கு வைத்து ஸ்டாலின் ஓடிக்கொண்டிருக்கும்போது, 20 ஐ இலக்கு வைத்து ஓடத் தயாராகி விட்டார் அழகிரி.

தான் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்று தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்வார்கள் என்று இருந்த நிலையில், திமுகவினர் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருவதோடு அல்லாமல், திமுக நிர்வாகிகள் கூட்டமும் நடந்து முடிந்துவிட்டதால்தான் உறுதியாக களம் இறங்கி இருக்கிறாராம் அழகிரி.

பொறுத்து பொறுத்து பார்த்த அழகிரி, தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக மா.செ., ஒ.செ.,க்களூடன் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனையிலும் ஈடுபட்டதால், இதற்கு மேலும் காத்திருந்து பிரயோசனம் இல்லை என்று நினைத்த அழகிரி அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறாராம்.

தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக அழகிரி சென்னை வந்திருப்பதாகவும், செய்தியாளர்களை சந்திப்பை தவிர்ப்பதற்காகத்தான் அவர் காரிலேயே மதுரையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கட்சி தொடங்கி ரஜினியுடன் கூட்டணி வைக்கும் முடிவில் இருப்பதாகவும், இதனால் அவர் அடிக்கடி ரஜியுடன் ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். தென் மாவட்டங்களில் தங்களுக்கு 20 தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லும் அழகிரி ஆதரவாளர்கள், அந்த 20 தொகுதிகளிலும் நாங்கள்தான் ஜெயிப்போம். 20 தொகுதிகளிலும் திமுக தோற்கப்போவது உறுதி என்கிறார்கள்.

அதே நேரம், தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஐந்து சதவிகித வாக்குகளையாவது இழக்க வைப்பதே எங்கள் இலக்கு என்கிறார்கள்.