×

ஸ்பெஷலாக மாறிய கோவை தெற்கு தொகுதி.. அனல் பறக்கும் அரசியல் களம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடக்கவுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகிய கட்சித் தலைவர்கள் முதல்வர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதுவரை தமிழகத்தை ஆண்ட மாபெரும் கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம். கட்சி ஆரம்பித்து ஒரு சில வருடங்களிலேயே மக்கள் மத்தியில் பேராதரவு பெற்றிருக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 6 முதல் 10% வாக்குகளை பெறும் என
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடக்கவுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகிய கட்சித் தலைவர்கள் முதல்வர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதுவரை தமிழகத்தை ஆண்ட மாபெரும் கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம். கட்சி ஆரம்பித்து ஒரு சில வருடங்களிலேயே மக்கள் மத்தியில் பேராதரவு பெற்றிருக்கிறது.

இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 6 முதல் 10% வாக்குகளை பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில், அவரை எதிர்த்து பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் அங்கு களம் காணுகிறார். கமல்ஹாசனும் வானதியும் போட்டியிடுவதால் அந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன், வானதி உட்பட 21 பேர் போட்டியிடுகின்றனர். கோவை மண்டலத்தில் இதுவே அதிகபட்சம். அதனால், இந்த தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பதற்றத்தை தணிக்கும் பொருட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.