×

1996இல் என் பெயர் அரசியலில் இழுக்கப்பட்டது : செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த்

நான் பேசியது மாவட்ட செயலாளர்கள் மூலம் வெளிவரவில்லை. அவர்களுக்கு என் நன்றி. 2021 அரசியல் தான் என்றும் செய்தியாளர்களிடம் கூறிய ரஜினி, கடந்த 5 ஆம் தேதி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தினார். இந்நிலையில், இன்று சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தில் பேசத் தொடங்கினார். அதில், ‘மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு நான் ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று கூறினேன். அதனைப் பற்றிய பல்வேறு
 

நான் பேசியது மாவட்ட செயலாளர்கள் மூலம் வெளிவரவில்லை. அவர்களுக்கு என் நன்றி. 

2021 அரசியல் தான் என்றும் செய்தியாளர்களிடம் கூறிய ரஜினி, கடந்த 5 ஆம் தேதி  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தினார். இந்நிலையில், இன்று சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தில் பேசத் தொடங்கினார். அதில், ‘மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு நான் ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று கூறினேன். அதனைப் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத் தான் இந்த கூட்டம் கூட்டினேன். நான் பேசியது மாவட்ட செயலாளர்கள் மூலம் வெளிவரவில்லை. அவர்களுக்கு என் நன்றி. 

1996இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. ஆனால், நான் அப்போது எதுவும் சொல்லவே இல்லை. 25 வருடங்களாக நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருவது என் தவறில்லை. அரசியலில் ஈடுபடுவது குறித்து 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் தான் சொன்னேன்’ என்று கூறினார்.