×

நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்? கமல்

கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறார் மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன். இலங்கை இறுதிப்போரின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவிடத்தினை இடிக்குமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இடித்து தரை மட்டமாக்கி
 

கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறார் மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன்.

இலங்கை இறுதிப்போரின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவிடத்தினை இடிக்குமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இடித்து தரை மட்டமாக்கி இருக்கிறார்கள். இதை கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தை இடித்ததற்காக தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும், நினைவுத்தூணை மீண்டும் கட்டித்தர முடியாது என்று அந்நாட்டு அமைச்சர் கொக்கரித்திருக்கிறார்.

இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.