×

சசிகலா செய்த சத்தியம்! அதிமுக – அமமுகவில் சலசலப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் 15.2.2017 அன்று சரணடைய செல்லும் முன்பாக மெரினா சென்று ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இரு கைகளாலும் ரோஜாமலர்களை ஐந்து முறைக்கு மேல் அள்ளிப்போட்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜெ., சமாதியில் கைகளை ஓங்கி அடித்து சத்தியம் செய்தார். இப்படி மூன்று மூறை ஆத்திரத்துடன் அடித்து சத்தியம் செய்தார் சசிகலா. பின்னர், ராமாபுரம் எம்.ஜி.அர். நினைவு இல்லத்திற்கு சென்று அங்கிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்தார். இதையடுத்து அவர்
 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் 15.2.2017 அன்று சரணடைய செல்லும் முன்பாக மெரினா சென்று ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இரு கைகளாலும் ரோஜாமலர்களை ஐந்து முறைக்கு மேல் அள்ளிப்போட்டு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஜெ., சமாதியில் கைகளை ஓங்கி அடித்து சத்தியம் செய்தார். இப்படி மூன்று மூறை ஆத்திரத்துடன் அடித்து சத்தியம் செய்தார் சசிகலா. பின்னர், ராமாபுரம் எம்.ஜி.அர். நினைவு இல்லத்திற்கு சென்று அங்கிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்தார்.

இதையடுத்து அவர் சரணடைவதற்காக பெங்களூரு சென்றார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு வருடங்கள் சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா, வரும் 27ம் தேதி அவர் விடுதலை ஆகிறார்.

விடுதலைக்கு பின்னர் அவர் நேரே மன்னார்குடிக்கு சென்று அங்கே ஓய்வு எடுக்கப்போவதாக தகவல். அதன் பின்னரே அவர் அரசியலில் தீவிரம் காட்டுவார்கள் என்றே தெரிகிறது.

சசிகலாவின் விடுதலை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தாலும் , தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே பேச்சு எழுந்திருக்கிறது. உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது என்று துக்ளக்ரமேஷ் சொல்வதை பார்த்தால், ஓய்வுக்கு பின்னர் அவர், தீவிர அரசியலில் இறங்குவதால் சசிகலாவின் தாக்கம் பெரிதாக இருக்கும் என்றே தெரிகிறது.

சசிகலா விடுதலை ஆகும் வேளையில், அவரின் சத்தியம் குறித்தும் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ’’அக்கா சமாதியில் அடித்து சத்தியம் செய்ததே நரேந்திர மோடி அரசை அகற்றிக் காட்ட வேண்டும் என்றுதான் என டிடிவி தினகரனிடம் அப்போது சசிகலா சொன்னதாக ஒரு தகவல் உண்டு. ஆனால், அத்தனை ஆத்திரமாக அவர் செய்த சத்தியத்தை நிறைவேற்றப்போகும் போது என்னென்ன அதிர்வலைகளை ஏற்படுத்துமோ என்பதே அதிமுக, அமமுகவினரிடையே பரபரப்பு பேச்சு எழுந்திருக்கிறது.