×

மஞ்சள் கலருக்கு மாறிய ஓ.பி.எஸ்

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருந்தார். அமைச்சர் ஜெயக்குமார் தொடக்க உரை ஆற்றினார். அதன் பின்னர் பேச வந்த கே.பி.முனுசாமி, பேசி முடித்த பின்னர் முக கவசத்தை மைக் அருகிலேயே மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். ‘’அண்ணே..மாஸ்க்கை..’’மறந்துட்டு போறீங்க, என்று ஜெயக்குமார் சொல்லவும், ஓடிவந்தார் முனுசாமி. மாஸ்க்கை கையில் எடுத்துக்கொண்ட முனுசாமியிடம் ஜெயக்குமார் மெல்ல ஏதோ சொல்ல, அவர் சிரிக்க,
 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் தொடக்க உரை ஆற்றினார். அதன் பின்னர் பேச வந்த கே.பி.முனுசாமி, பேசி முடித்த பின்னர் முக கவசத்தை மைக் அருகிலேயே மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். ‘’அண்ணே..மாஸ்க்கை..’’மறந்துட்டு போறீங்க, என்று ஜெயக்குமார் சொல்லவும், ஓடிவந்தார் முனுசாமி. மாஸ்க்கை கையில் எடுத்துக்கொண்ட முனுசாமியிடம் ஜெயக்குமார் மெல்ல ஏதோ சொல்ல, அவர் சிரிக்க, மேடையில் இருந்தவர்களூம் கலகலவென்று சிரித்தனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மஞ்சல் சட்டையில் இருந்தார். எப்போது வெள்ளை உடையில் இருக்கும் ஓபிஎஸ், இன்று மஞ்சள் சட்டையில் வந்திருந்தது பலரையும் கவனிக்க வைத்தது.

பொதுவாகவே முழுக்கை சட்டை போட்டு அதை மடித்துவிடும் பழக்கம் உள்ள ஓபிஎஸ் இன்று அரைக்கை சட்டை போட்டிருந்ததும் கவனிக்க வைத்தது.

ஓபிஎஸ் தவிர அதிமுக அமைச்சர்களில் ஒன்னொருவரும் மஞ்சள் சட்டையில் வந்திருந்தார். அவர் அதிரடி மன்னன் கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஓபிஎஸ்சின் சட்டை லேசான மஞ்சள் கலர் என்றால், ராஜேந்திரபாலாஜியின் சட்டை கண்ணைப்பறிக்கும், தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படியான மஞ்சள் சட்டை.