×

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை… அதிமுக திட்டவட்டம்

பாஜகவின் கனவுகோட்டை நொறுங்கும்படியாக செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது அதிமுக. 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அறிவித்திருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் வெளிப்படையாக அறிவித்தும் கூட, பாஜக தரப்பில் இருந்து இன்னமும் அதிமுக கூட்டணி என்று சொல்லவில்லை. மேலும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர்
 

பாஜகவின் கனவுகோட்டை நொறுங்கும்படியாக செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது அதிமுக.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அறிவித்திருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் வெளிப்படையாக அறிவித்தும் கூட, பாஜக தரப்பில் இருந்து இன்னமும் அதிமுக கூட்டணி என்று சொல்லவில்லை. மேலும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்தான் எடப்பாடி பழனிச்சாமி. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகதான் முடிவு செய்யும் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாஜக தலைமையில் ஆட்சி அமைய, கூட்டணி கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது என்று பேசப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.