×

திமுகவுக்கு ஆதரவு கிடையாது… சத்யராஜ் திட்டவட்டம்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் சேரப்போவதாகவும், அவருக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது எல்லாமே, சத்யராஜை வைத்து திமுகவின் செய்யும் பித்தலாட்டம் என்று தெரியவந்துள்ளது. பெரியார், எம்.ஜி.ஆர்., பிரபாகரன் மூவர் மட்டுமே தன் விருப்பத்திற்குரிய தலைவர்கள் என்று அடிக்கடி சொல்லி வருபவர் நடிகர் சத்யராஜ். அவரின் மகள் திமுகவில் சேரப்போவதாக செய்தி வெளியானதுதான் பரபரப்புக்கு காரணம். ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் திவ்யா
 

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் சேரப்போவதாகவும், அவருக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது எல்லாமே, சத்யராஜை வைத்து திமுகவின் செய்யும் பித்தலாட்டம் என்று தெரியவந்துள்ளது.

பெரியார், எம்.ஜி.ஆர்., பிரபாகரன் மூவர் மட்டுமே தன் விருப்பத்திற்குரிய தலைவர்கள் என்று அடிக்கடி சொல்லி வருபவர் நடிகர் சத்யராஜ். அவரின் மகள் திமுகவில் சேரப்போவதாக செய்தி வெளியானதுதான் பரபரப்புக்கு காரணம்.

ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் திவ்யா சத்யராஜ், சமூக ஆர்வலர். அதற்காகவே அவர் ’மகிழ்மதி’ என்ற இயக்கமும் ஆரம்பித்திருக்கிறார். சமூக சேவைக்காக, அவர் மகிழ்மதி இயக்கம் அரசியல் கட்சியாக கூட மாறலாம் என்றும், அரசியலுக்கு வரும் ஆர்வமும் இருக்கிறது என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார். அவரின் இயக்கத்திற்கும், அரசியலுக்கும் ஆதரவு என்று சத்யராஜும் தெரிவித்திருந்தார்.

மேலும், நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியில் நின்ற தன் மகன் சிபிக்கும் ஆதரவு தெரிவித்து, இளைஞர்கள் வரட்டும். அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்வேன் என்று சொல்லி இருந்தார்.

இந்நிலையில், தற்போது திவ்யா சத்யாராஜ் அரசியலுக்கு வரப்போவதாக சொன்னதாகவும், திவ்யாவின் அரசியல் பாதைக்கு ஒரு தககப்பனாக, நண்பனகாக பக்கபலமாக இருப்பேன் என்று சத்யராஜ் சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்தன. பாஜகவின் பல திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பினை காட்டியவர் திவ்யா. அதனால் இந்த செய்திகள் உண்மை என்றே நம்ப வைத்தன.

இதுகுறித்து சத்யராஜுக்கு நெருக்கமானவர்கள் அவரிடமே கேட்டதற்கு, அது பழைய செய்தி. இப்போது நான் எதையும் சொல்லவில்லை என்றிருக்கிறார்.
அந்த பழைய பேட்டியை புதுப்பித்து ஊடகங்கள் ஏன் வம்பு வளர்க்கின்றன என்று விசாரித்தால், இதற்கெல்லாம் காரணம் தி.மு.க.வின் ஊடக அதர்மங்கள் என்று, சொல்கிறார்கள்.

ஏன் இப்படி என்று கேட்டால், தி.மு.க என்றால் பித்தலாட்டம் தானே! என்று கேட்கிறார்கள்.