×

நாற்காலியும் தரல.. மைக்கும் தரல.. திமுக மேடையில் திருநாவுக்கரசருக்கு நடந்த அவமானம்!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 23 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திமுக கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். காலை 8 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கியது. நீண்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருபக்கமும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், எம்.பிக்கள் மறுபக்கமும் அமர்ந்திருந்தனர். ஸ்டாலின் மற்ற தலைவர்கள் வருவதற்கு முன்னதாகவே திருநாவுக்கரசர் எம்.பி. மேடைக்கு சென்றுவிட்டார். ஸ்டாலின் நாற்காலிக்கு அருகில் இருந்த நாற்காலியில் அவர்
 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 23 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திமுக கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

காலை 8 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கியது. நீண்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருபக்கமும், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், எம்.பிக்கள் மறுபக்கமும் அமர்ந்திருந்தனர்.

ஸ்டாலின் மற்ற தலைவர்கள் வருவதற்கு முன்னதாகவே திருநாவுக்கரசர் எம்.பி. மேடைக்கு சென்றுவிட்டார். ஸ்டாலின் நாற்காலிக்கு அருகில் இருந்த நாற்காலியில் அவர் உட்காரச்சென்றார். உடனே ஓடிவந்த அமைப்பாளர்கள், நீங்க இங்கே உட்கார கூடாது. இது கூட்டணி கட்சி தலைவர்கள் அமரும் இடம் என்று சொல்லி அவரை அடுத்த பக்கம் அனுப்பி விட்டனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ஸ்டாலின் வந்து உட்கார்ந்ததும் அவர் அருகில் வைகோ உட்கார்ந்தார். அப்போது வந்த தங்கபாலு வைகோவுக்கு அருகில் உட்கார வைக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொரோனாவினால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தததால் அவர் வரவில்லை. மதியம்தான் அவர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதனால், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலுவை கூட்டணி கட்சி தலைவர்கள் பகுதியில் அமரவைத்தனர். அப்படிப்பார்த்தால் திருநாவுக்கரசரும் முன்னாள் காங்கிர கமிட்டி தலைவர்தான். ஆனால் அவரை தலைவர்கள் வரிசையில் அமரக்கூடாது என்று ஏன் தடுத்தனர் என்று திருநாவுக்கரசர் ஆதரவாளர்களிடையே பேச்சு எழுந்தது.

இது ஒருபுறம் இருக்க, நற்காலிதான் தரவில்லை. மைக்காவது கொடுங்க நான் பேசிவிட்டு போய்விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் திருநாவுக்கரசு. அதற்கும் தடை போட்டுவிட்டார்களாம். முறைப்படி தலைவர்கள் பேசிய பின்னர்தான் நீங்கள் பேசமுடியும் என்று சொல்லி விட்டார்களாம். ஸ்டாலினே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசுவார். அதனால், கடைசிவரைக்கும் தனக்கு வாயிப்பில்லை என்பதை புரிந்துகொண்ட திருநாவுக்கரசர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே மேடையை விட்டு விருட்டென்று புறப்பட்டு சென்றிவிட்டார்.

திருநாவுக்கரசருக்கு நடந்த அவமானத்தால் அவரது ஆதரவாளர்களும் ஓடிவந்திருக்கிறார்கள். நீங்க யாரும் என் பின்னே வராதீங்க. நாலுபேரு பார்த்தா விசயம் மீடியாவுக்கு தெரிந்துவிடும். நான் மட்டும் போறேன். நீங்க இருந்து போராட்டம் முடிந்ததும் வாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

கூட்டத்தில் நின்றிருந்த நமக்கு தகவல் தெரியவர, தங்கபாலுவுக்கு நாற்காலி கொடுத்தவங்க, திருநாவுக்கரசருக்கு ஏன் மறுத்தாங்க என்று விசாரித்தால், அதிமுகவுக்கும் ரஜினிக்கும் ஆதரவான கருத்துக்களை சொல்லி வருகிறார் திருநாவுக்கரசர். அப்படி இருக்கும்போது அவரை எப்படி அனுமதிப்பாங்க? என்று கேட்கிறார்கள்.