×

அரசியல் ரீதியாக முரண்பட்டாலும் அவர் கொண்டாடப் படவேண்டிய கலைஞர்.. காங்., எம்.பி. ஜோதிமணி

அனைத்து கட்சியிலும் ரஜினிக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். கட்சி தொடங்குவதால்தான் பாஜகவுடன் அவர் இணைத்து பேசப்படுகிறார். அதனால் சில அவரை விமர்சித்து வருகிறார்கள். பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பலரும், நண்பர் ரஜினிக்கு வாழ்த்துகள் என்றே தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், ‘’ரஜினிகாந்த் இயல்பான நடிப்பு,வேகம், ஸ்டைல், நகைச்சுவையுணர்வு என அனைத்தும் வாய்க்கப்பெற்ற ஒரு அற்புதமான கலைஞர். முல்லும்மலரும் போன்ற காவியங்கள் காலத்தால் அழியாதவை.அரசியல் ரீதியாக முரண்பட்டாலும் அவர் கொண்டாடப்
 

அனைத்து கட்சியிலும் ரஜினிக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். கட்சி தொடங்குவதால்தான் பாஜகவுடன் அவர் இணைத்து பேசப்படுகிறார். அதனால் சில அவரை விமர்சித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பலரும், நண்பர் ரஜினிக்கு வாழ்த்துகள் என்றே தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘’ரஜினிகாந்த் இயல்பான நடிப்பு,வேகம், ஸ்டைல், நகைச்சுவையுணர்வு என அனைத்தும் வாய்க்கப்பெற்ற ஒரு அற்புதமான கலைஞர். முல்லும்மலரும் போன்ற காவியங்கள் காலத்தால் அழியாதவை.அரசியல் ரீதியாக முரண்பட்டாலும் அவர் கொண்டாடப் படவேண்டிய கலைஞர்.அன்பு,அமைதி,நல்ல உடல்நலத்தோடு நல்வாழ்வுவாழ வாழ்த்துகிறேன்.’’ என்று தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது ஆன்மீக அரசியல் குறித்தும், பாஜக தொடர்பு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த ஜோதிமணி இவ்வாறு வாழ்த்து தெரிவித்திருப்பது ரஜினி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.