×

பாரதிக்கு நன்றி சொன்ன எஸ்.வி.சேகர்!

சமீப காலங்களாக பாஜகவில் ஓரங்கட்டப்பட்டுள்ள எஸ்.வி.சேகர், கட்சி தாவும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் , அண்மையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலினை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடனே அவர் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ’தொற்று வியாதி’ ஜாக்கிரதை என்று திமுகவினர் உதயநிதியை எச்சரித்தனர். எஸ்.வி.சேகரும் உதயநிதியும் முகக்கவசம் போடாமல் சந்தித்ததை வைத்துதான், எஸ்.வி.சேகர்‘தொற்று வியாதி’ என்று மறைமுகமாக சொல்லி, உதயநிதியை எச்சரித்தனர். தொடர்ந்து ரஜினிக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்
 

சமீப காலங்களாக பாஜகவில் ஓரங்கட்டப்பட்டுள்ள எஸ்.வி.சேகர், கட்சி தாவும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் , அண்மையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலினை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடனே அவர் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ’தொற்று வியாதி’ ஜாக்கிரதை என்று திமுகவினர் உதயநிதியை எச்சரித்தனர்.

எஸ்.வி.சேகரும் உதயநிதியும் முகக்கவசம் போடாமல் சந்தித்ததை வைத்துதான், எஸ்.வி.சேகர்‘தொற்று வியாதி’ என்று மறைமுகமாக சொல்லி, உதயநிதியை எச்சரித்தனர்.

தொடர்ந்து ரஜினிக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார் சேகர்.

அரசியலில் ஒரு பிடிபானம் இல்லாத நிலையில் இருக்கும் எஸ்.வி.சேகர் இனி அவ்வளவுதான் என்று விமர்சனம் இருக்கும் நிலையில், இன்று மகாகவி பாரதியாரின் 139வது பிறந்த நாளில், அவரின் படத்திற்கு மாலை அணிவித்த மரியாதை செய்த எஸ்.வி.சேகர்,

’’தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்திக்
கொடுங்கூற்றுக் கிரைஎனப்பின் மாயும் பலவேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ ?’’என்ற பாரதியின் வரிகளை சொல்லிவிட்டு, அந்த வரிகளை எழுதியதற்காக, ‘’நன்றி பாரதி’’ என்று சொல்லி இருக்கிறார்.