×

ஜெ, – சசிகலா, கனிமொழி-ராசா மீது கமல் கடும் தாக்கு

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாள் முதலாக, அவரை சங்கி என்றும், பாஜவின் பி டீம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர் ஒரு கட்டத்தில் கடுப்பாகி, நான் யாருடையை பி டீமும் கிடையாது. என்னைப்பார்த்து அசிங்கமாக ஏன் திட்டுகிறீர்கள்…அதாவது நான்பாஜகவின் பி டீம் என்று ஏன் என்னை சொல்கிறீர்கள். இனிமேல் என்ன அப்படி அசிங்கமாக திட்டாதீர்கள் என்று சொல்லிப்பார்த்தார். ஆனாலும், கமல் ஒரு சங்கி, அவர் பாஜகவின் பி டீம் என்கிற கமெண்ட்டுகள்
 

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாள் முதலாக, அவரை சங்கி என்றும், பாஜவின் பி டீம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர் ஒரு கட்டத்தில் கடுப்பாகி, நான் யாருடையை பி டீமும் கிடையாது. என்னைப்பார்த்து அசிங்கமாக ஏன் திட்டுகிறீர்கள்…அதாவது நான்பாஜகவின் பி டீம் என்று ஏன் என்னை சொல்கிறீர்கள். இனிமேல் என்ன அப்படி அசிங்கமாக திட்டாதீர்கள் என்று சொல்லிப்பார்த்தார். ஆனாலும், கமல் ஒரு சங்கி, அவர் பாஜகவின் பி டீம் என்கிற கமெண்ட்டுகள் ஓயவில்லை.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததால், அதிமுகவினர் பலரும் கமல்ஹாசனை விமர்சித்து வந்தனர். உண்மை நிலை தெரியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் சொன்னார்.

தொடர்ந்து தன்னை சங்கி என்றும், பாஜக பி டீம் என்றும் முன்வைக்கப்படும் விமர்சனங்களால் கொதித்தெழுந்த கமல்ஹாசன்,

’’அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.
திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.

ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.’’ என்கிறார்.

2ஜி வழக்கில் திஹார் சிறையில் இருந்த ஆ.ராசா, கனிமொழி ஆகியோரையும், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும்(மறைந்த ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தவர்) சசிகலாவையும் கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.