×

ரஜினியுடன் கூட்டணி… ஓ.பி.எஸ். உறுதி!

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பேட்டியை நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பின்னர், ரஜினிகாந்த் கட்சி தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பிறகு அதைப்படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் என்று சொன்னார். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து கேட்டபோது, ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன் என்று சொன்னவர், அவரது வரவு நல்வரவாகட்டும் என்றும் சொன்னார். அதிமுகவுடன் ரஜினி கட்சி கூட்டணி
 

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பேட்டியை நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பின்னர், ரஜினிகாந்த் கட்சி தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பிறகு அதைப்படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் என்று சொன்னார்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து கேட்டபோது, ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன் என்று சொன்னவர், அவரது வரவு நல்வரவாகட்டும் என்றும் சொன்னார்.

அதிமுகவுடன் ரஜினி கட்சி கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்று பதில் அளித்துள்ளார்.

கூட்டணி இல்லை என்று சொல்லாமல், எதுவேண்டுமானாலும் அவர் சொன்னதால் அதிமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என்ற பரபரப்பு பேச்சு எழுந்திருக்கிறது.