×

உதயநிதிக்காக சொத்துக்களை அடமானம் வைக்கும் சோழமண்டல நிர்வாகிகள்!

இந்த கொரோனா காலத்திலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ஆடம்பரமான பிரச்சாரம், பொதுமக்களை முகம்சுழிக்க செய்திருக்கிறது என்றால், திமுக நிர்வாகிகளை புலம்ப வைத்திருக்கிறது. உதயநிதி பிரச்சாரத்தினால் சொத்துக்களை அடமானம் வைக்கும் அளவுக்கு போய்விட்டதாக புலம்பித்தவிக்கிறார்கள்.மூணு நாளு பிரச்சாரத்துக்குள்ளேயே மூணு மாவட்ட நிர்வாகிகளை இப்படி கதிகலங்க வைத்திருக்கிறார் உதயநிதி. நமக்கு நாமே பிரச்சார திட்டத்தின் மூலமாக விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் என்று டீக்கடை, காய்கனிகடை, கறிக்கடை என்று ஸ்டாலின் எப்படி ஒருத்தரை விடாமல் சந்தித்தாரோ அப்படித்தான் உதயநிதியும் விடியலை
 

இந்த கொரோனா காலத்திலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ஆடம்பரமான பிரச்சாரம், பொதுமக்களை முகம்சுழிக்க செய்திருக்கிறது என்றால், திமுக நிர்வாகிகளை புலம்ப வைத்திருக்கிறது. உதயநிதி பிரச்சாரத்தினால் சொத்துக்களை அடமானம் வைக்கும் அளவுக்கு போய்விட்டதாக புலம்பித்தவிக்கிறார்கள்.
மூணு நாளு பிரச்சாரத்துக்குள்ளேயே மூணு மாவட்ட நிர்வாகிகளை இப்படி கதிகலங்க வைத்திருக்கிறார் உதயநிதி.

நமக்கு நாமே பிரச்சார திட்டத்தின் மூலமாக விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் என்று டீக்கடை, காய்கனிகடை, கறிக்கடை என்று ஸ்டாலின் எப்படி ஒருத்தரை விடாமல் சந்தித்தாரோ அப்படித்தான் உதயநிதியும் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார திட்டத்தின் மூலமாக விவசாயிகள், மீனவர்கள் என்று ஒருத்தரை விடாமல் சந்தித்து அவர்களது குறைகள் கேட்டறிந்து வருகிறார்.

’அடடே நல்ல விஷயமாச்சே!’ என பாராட்டிய திமுக நிர்வாகிகள் பலரும் இப்போது ’அவசரப்பட்டுவிட்டோமோ?’ என நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சோழ மண்டலத்தைச் சேர்ந்த திமுக மா.செ. ஒருவர், ‘’இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து மூச்சுமுட்டுமளவிற்கு நிகழ்ச்சிகளை நடத்தி ஓய்ந்து போயிருக்கிறோம். இந்த லட்சணத்தில் உதயநிதி பிரச்சாரத்திற்கு பத்திரிகைகளில் விளம்பரங்களை கொடுக்கச் சொல்லி தலைமையிலிருந்து போன் மேல போன் வந்திகிட்டே இருந்தது. நாங்களும் வேற வழியின்றி பல ஆயிரங்களை செலவழித்து விளம்பரங்களை கொடுத்திருக்கிறோம். உதயநிதி வாழ்த்து விளம்பரத்திற்காக மட்டும் சில கோடிகள் காலியாகி இருக்கும். இதுபோக ஏகப்பட்ட பிரச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தச் சொல்லி உத்தரவு போட்டிருக்குது தலைமை. உதயநிதி பிரச்சாரம் தூள் பறத்தி காட்ட வேண்டும் என்று சொல்வதற்காக, நாங்கள் எங்கள் சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து செலவுகள் செய்வது அவசியம்தானா?’’ என ரொம்பவே கொதித்தார்.

மேலும், ‘’எத்தனையோ வீட்டு நெருக்கடிகளுக்கு எல்லாம் கூட அடமானம் வைக்காத சொத்தை இந்த பிரச்சாரத்துக்காக வைக்கிறோம் என்கிறபோது மனசு வலிக்குது’’என்றார்.

சோழ மண்டலத்து நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட கதிதான், நமக்கும் என்று தொண்டை மண்டல, கொங்கு மண்டல, பாண்டிய மண்டல நிர்வாகிகளும் கதிகலங்கி கிடக்கிறார்களாம்.

கட்சிக்காரர்களின் கொதிப்பு இப்படியிருக்க உதயநிதியை மையமாக வைத்து பிரச்சாரத்தின் போது ஊருக்கு ஊர் திமுகவினர் செய்த ரவுசுகள் பொதுமக்களை ரொம்பவே முகம்சுழிக்க செய்திருக்கின்றன.

‘’ இன்னும் தேர்தலே நடக்கவில்லை. ஆனால் அதற்குள்ளாக ஆட்சியை பிடித்த மாதிரி அராஜகம் பண்றாங்க. போலீஸ் சொன்னதை கேட்காமல் பிரச்சாரம் என்கிற பெயரில் அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு ஆட்டம் என்றால், தப்பித்தவறி வந்துவிட்டார்கள் என்றால்? நிச்சயம் தமிழகம் தாங்காது’’ என்கிறார்கள் டெல்டா மாவட்டத்து மக்கள்.