×

பயந்துபோய் என்னை விடுவித்துவிட்டார்கள்… உதயநிதி

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறது திமுக. மு.க.ஸ்டாலின் ஜனவரியில் காஞ்சிபுரத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாகவே உதயநிதிஸ்டாலின் இன்று முதல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாகவே கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், பிரச்சாரத்தை தொடங்க முற்பட்ட உதயநிதி உட்பட கட்சியினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். திமுகவினர்
 

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறது திமுக. மு.க.ஸ்டாலின் ஜனவரியில் காஞ்சிபுரத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாகவே உதயநிதிஸ்டாலின் இன்று முதல் பிரச்சார பயணத்தை தொடங்கினார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாகவே கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், பிரச்சாரத்தை தொடங்க முற்பட்ட உதயநிதி உட்பட கட்சியினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திமுகவினர் தேர்தல் பணிகளை செய்யக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே, 144 உத்தரவு போட்டுள்ளனர் என்று ஆவேசப்பட்டார் உதயநிதி.

’’முதலமைச்சர் எடப்பாடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் திமுக தலைவர்களோ எங்கும் செல்லக்கூடாது. அடிமை அதிமுக அரசுக்கு திமுகவின் பிரச்சாரத்தின் முதல் நாளே பயம் தொற்றி விட்டது. கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று கண்டனம் தெரிவித்திருந்த கனிமொழி, உதயநிதி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவருடைய பிரச்சார பயணம் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருந்தார்.

உதயநிதியின் கைதுக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சில மணி நேரம் கழித்து உதயநிதி உட்பட திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து உதயநிதி, ‘’அடிமை அதிமுக-பாசிச பாஜகவுக்கு எதிராக மொத்த தமிழகமும் உள்ளது. அந்த உணர்வை ஒன்றுபட்டு ஒருங்கிணைக்க ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சார பயணத்தை திருக்குவளையில் இன்று தொடங்கினேன். அதை முடக்க நினைத்து கைது செய்கின்றனர். எங்கள் உணர்வை அடக்க அடக்க வெகுண்டெழுவோம்-தமிழகம் மீட்போம்’’என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும், ‘’விடியலைநோக்கி ஸ்டாலினின்குரல்’ பிரச்சார பயணத்தின் முதல் நாளிலேயே கிடைத்த எழுச்சி பொறுக்காமல் அடிமை அதிமுக அரசு என்னை கைது செய்தது. எனது கைதிற்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு அஞ்சி தற்போது விடுவித்துள்ளது. எனது பிரச்சார பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன்; தொடர்வேன்’’என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.