×

அந்த எரிச்சலில்தான் இப்படி நடந்துகொண்டாரா பிரதமர் மோடி?

தமிழ்நாட்டை பொருத்தவரையிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைக்கு நடந்த ஒரு விசயத்திலும் கூட அவர் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறார். மொழி வாரியாக இன்று மாநிலங்கள் உதயமான நாள். 1.11.1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாகின. மெட்ராஸ் பிரெசிடென்சியில் அங்கம் வகி்த்திருந்த பகுதிகள் மொழி அடிப்படையில் புதிய மாநிலங்களாக பிரிக்கபட்டன. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இந்த நாளில் தனித்தனி மாநிலங்கள் ஆகின. தமிழ்நாடு தனிமாநிலமாக
 

தமிழ்நாட்டை பொருத்தவரையிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைக்கு நடந்த ஒரு விசயத்திலும் கூட அவர் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

மொழி வாரியாக இன்று மாநிலங்கள் உதயமான நாள். 1.11.1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாகின. மெட்ராஸ் பிரெசிடென்சியில் அங்கம் வகி்த்திருந்த பகுதிகள் மொழி அடிப்படையில் புதிய மாநிலங்களாக பிரிக்கபட்டன. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இந்த நாளில் தனித்தனி மாநிலங்கள் ஆகின.

தமிழ்நாடு தனிமாநிலமாக உருவாகியதை’தமிழ்நாடு நாள்’என்று தமிழர்கள் கொண்டாடி வருகின்றார்கள். இதே போல கர்நாடக, ஆந்திரா, கேரளா மக்களும் இன்றைய தினம் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களூக்கு அந்தந்த மொழிகளேயும் ஆங்கிலத்திலும் வாழ்த்து சொல்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆனால், தமிழ்நாடு நாளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதால், பாரத பிரதமருக்கு ஏன் இந்த மாற்றான் தாய் மனப்பாண்மை என்று தமிழ் உணர்வாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தின் பாஜக காலூன்றுவதில் பெரும் போராட்டமாக இருப்பதால் அந்த எரிச்சலில்தான் தமிழ்நாட்டிற்கு வாழ்த்து சொல்லவில்லை என்றே பேச்சு எழுந்திருக்கிறது.