×

மு.க அழகிரியுடன் திமுக சமரசம் – ஸ்டாலின் கலக்கல் ‘ஐடியா’

என்னவோ தெரியவில்லை? கடந்த சில தினங்களாகவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டணி விஷயத்தில் புதுப் புதுத் திட்டங்களோடு களம் காணத் தொடங்கியிருக்கிறார். தமிழகத்தின் பெரிய கட்சிகள் என்றில்லாமல் சிறிய,சிறிய அளவிலான அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தேர்தலை எதிர் கொள்ளும் புதிய திட்டங்களை தாயரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த தேர்தலில் சுமார் 60 அமைப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்திய திமுக தனது கூட்டணியில் அவர்களை இணைத்துக் கொண்டது இந்த முறை சுமார் 150-க்கும் மேற்பட்ட தமிழக அமைப்புகளை
 

என்னவோ தெரியவில்லை? கடந்த சில தினங்களாகவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டணி விஷயத்தில் புதுப் புதுத் திட்டங்களோடு களம் காணத் தொடங்கியிருக்கிறார். தமிழகத்தின் பெரிய கட்சிகள் என்றில்லாமல் சிறிய,சிறிய அளவிலான அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தேர்தலை எதிர் கொள்ளும் புதிய திட்டங்களை தாயரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த தேர்தலில் சுமார் 60 அமைப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்திய திமுக தனது கூட்டணியில் அவர்களை இணைத்துக் கொண்டது இந்த முறை சுமார் 150-க்கும் மேற்பட்ட தமிழக அமைப்புகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இருக்கிறாராம் ஸ்டாலின்


இதற்கிடையே மதுரைக்கு அந்தப் பக்கமாக மு.க. அழகிரியின் ஆதர்வாளர்கள் அதிகம் இருப்பதாலும்,, மு.க அழகிரி கடைசி நேரத்தில் ஏதாவது திட்டமிடுதலில் இறங்கினால் அப்படிப்பட்ட பிரச்னைகளை தவிர்க்கவும் மு.க. ஸ்டாலின் புதிய செயல் களத்தில் இறங்கியுள்ளார்.அந்த வகையில் மு.க அழகிரிக்கு ரகசிய தூது விடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.’சமாதானமாகச் செல்வோம்’ என்ற அடிப்படையில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு தந்து இதன் பின்னணியில் செயல்படுமாறு மு.க அழகிரியிடம் திட்டங்கள் சொல்லப்பட்டிருக்கிறதாம். மு.க. அழகிரியும் இதனைக் கேட்டு “ஓ.கே. மகிழ்ச்சி” என்று சொன்னதாகவும் தெரிகிறது

சுபாஷ் சந்திரபோஸ்