×

அ.தி.மு.க.விடம் துணை முதல்வர் பதவி கேட்கும் பா.ஜ.க.,பா.மக.?

கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது.ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பை பெற வில்லை. அதே சமயம் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனை மனதில் வைத்து 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இருந்த போதிலும் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. இந்த நிலையில் வரும் 2021 தேர்தலில்
 

கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது.ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பை பெற வில்லை. அதே சமயம் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனை மனதில் வைத்து 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இருந்த போதிலும் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை.

இந்த நிலையில் வரும் 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் 60 இடம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். கூட்டணி குறித்து பா.ம.கவும் இப்போது களம் இறங்கியுள்ளது. பா.ஜ.க.வினர் 60 இடங்கள் கேட்கும் போது நாங்கள் ஏன் 80 இடங்கள் கேட்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தவிர துண முதல்வர் பதவியும் தங்களுக்கு தரப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனராம். பா.ஜ.க.வும் தங்கள் கட்சிக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என வலியுறுத்த தொடங்கி இருக்கிறது. இது குறித்து ஆலோசிக்க, பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவிநாலை மறுநாள் 17 -தேதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இர. சுபாஸ் சந்திர போஸ்