×

10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்! கொரோனா காலத்திலும் அசத்தும் முதல்வர்!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு தொழில்நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்து வருகிறார். கொரோனா காலத்திலும் கூட தமிழகத்தில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வழிவகை செய்து வருகிறார். ஆகவே, கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் முதலீடுகளைப் பெற்ற மாநிலமாகத் தமிழகம் உள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் தொழில் தொடங்க 42 புதிய நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் 30,664 கோடி
 

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு தொழில்நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்து வருகிறார். கொரோனா காலத்திலும் கூட தமிழகத்தில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வழிவகை செய்து வருகிறார். ஆகவே, கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் முதலீடுகளைப் பெற்ற மாநிலமாகத் தமிழகம் உள்ளது.

கடந்த 5 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் தொழில் தொடங்க 42 புதிய நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் 30,664 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 67,612 பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்புக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொழில் துறை சார்பில் இன்று 14 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. 10,000 கோடி முதலீட்டில் 7,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் இந்த 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் 6,300 கோடியில் முதலீடு செய்வதில் அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம், ஐநாக்ஸ் திரவஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவை அடங்கும்.

ஓசூரில் ஐநாக்ஸ் திரவஆக்ஸிஜன் நிறுவனமும், சென்னையை அடுத்த ஒரகடத்தில் அப்போலோ டயர்ஸ் நிறுவனமும் தொழிற்சாலை தொடங்க உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவ இருக்கிறது.

கொரோனா நெருக்கடி காலத்திலும் தமிழக முதல்வரின் இந்த சாதனையை பிறமாநிலத்தவர்களும் பாராட்டி வருகின்றார்கள்.