×

78 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

கொரோனா பிடிக்குள்தான் உலகம் இருக்கிறது. பல நாடுகளில் இரண்டாம் கொரோனா பாதிப்பு தொடங்கி விட்டது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 50,356 ஆக இருக்கிறது. புதிதாக குணம் அடைவோரின் எண்ணிக்கை 53,920. இப்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5.16 லட்சம். தினசரி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு காரணமாக இன்றைக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,16,632.. மொத்த பாதிப்புகளுடன் உடன் ஒப்பிடும் போது, தற்போது சிகிச்சை பெறுவோரின்
 

கொரோனா பிடிக்குள்தான் உலகம் இருக்கிறது. பல நாடுகளில் இரண்டாம் கொரோனா பாதிப்பு தொடங்கி விட்டது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 50,356 ஆக இருக்கிறது. புதிதாக குணம் அடைவோரின் எண்ணிக்கை 53,920. இப்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5.16 லட்சம்.

தினசரி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு காரணமாக இன்றைக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,16,632.. மொத்த பாதிப்புகளுடன் உடன் ஒப்பிடும் போது, தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6.11 % மட்டுமே.

மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 78,19,886. தேசிய குணம் அடைந்தோர் விகிதம் 92.41% ஆக இருக்கிறது. குணம் அடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோருக்கு இடையேயான இடைவெளி இப்போது 73,03,254 ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 577 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மாநிலங்களில் தினசரி குணமடையும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஏழாம் இடத்திலும், புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் ஏழாம் இடத்திலும், மரணிப்போர் எண்ணிக்கையில் ஏழாம் இடத்திலும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 670 பேர் பலியாகியுள்ளனர்.