×

விபத்தை தவிர்க்க இந்த கலர்ல எல்லாம் கார் வாங்காதீங்க!

இந்தியாவில், நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், அந்த வீட்டின் பயன்பாட்டிற்காக குறைந்த பட்சமாக பலரும் மூன்று கார்களையாவது வைத்திருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில், குடும்பத்தில் செல்போன் வைத்திருக்கும் எண்ணிக்கையில் கார்களின் எண்ணிக்கையும் வந்துவிடும் என்கிறது ஆய்வு. தனித்தனியே அலுவலகம் செல்வதற்கு, மகன், மகள் கல்லூரி செல்வதற்கு, குடும்பத்தோடு வெளியில் செல்வதற்கு, நீண்ட தூர பயணங்களுக்கு என்று ரகம் பிரித்து கார் வாங்கி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். இந்தியாவில், நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், அந்த வீட்டின் பயன்பாட்டிற்காக குறைந்த
 

இந்தியாவில், நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், அந்த வீட்டின் பயன்பாட்டிற்காக குறைந்த பட்சமாக பலரும் மூன்று கார்களையாவது வைத்திருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில், குடும்பத்தில் செல்போன் வைத்திருக்கும் எண்ணிக்கையில் கார்களின் எண்ணிக்கையும் வந்துவிடும் என்கிறது ஆய்வு. தனித்தனியே அலுவலகம் செல்வதற்கு, மகன், மகள் கல்லூரி செல்வதற்கு, குடும்பத்தோடு வெளியில் செல்வதற்கு, நீண்ட தூர பயணங்களுக்கு என்று ரகம் பிரித்து கார் வாங்கி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்தியாவில், நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், அந்த வீட்டின் பயன்பாட்டிற்காக குறைந்த பட்சமாக பலரும் மூன்று கார்களையாவது வைத்திருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில், குடும்பத்தில் செல்போன் வைத்திருக்கும் எண்ணிக்கையில் கார்களின் எண்ணிக்கையும் வந்துவிடும் என்கிறது ஆய்வு. தனித்தனியே அலுவலகம் செல்வதற்கு, மகன், மகள் கல்லூரி செல்வதற்கு, குடும்பத்தோடு வெளியில் செல்வதற்கு, நீண்ட தூர பயணங்களுக்கு என்று ரகம் பிரித்து கார் வாங்கி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், உலகிலேயே சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது என்கிற அதிர்ச்சியையும் தருகிறது ஆய்வுகளின் முடிவுகள்.

பொதுவாக நாம் நீண்ட நாட்கள் திட்டமிட்டு, ஆசையாசையாய் கார் வாங்கும் போது, ஷோ ரூம் சென்று நமக்குப் பிடித்த மாடல்களைப் பற்றி விசாரிக்கிறோம். காரில் இருக்கும் வசதிகளை எல்லாம் ஆய்வு செய்கிறோம்.  ஏர்பேக் இருக்கிறதா, ஏபிஎஸ் பிரேக் இருக்கிறதா என்று பாதுகாப்பு அம்சங்களை பற்றி தீர ஆராய்ந்து தான் வாங்குகிறோம். இவையெல்லாம் பாதுகாப்பு விஷயங்கள் தான் என்றாலும், விபத்தை தவிர்ப்பதற்கு இவை மட்டுமே முக்கியம் கிடையாது. இவை எல்லாம் விபத்து நிகழ்ந்த பிறகு நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான விஷயங்கள். விபத்தே நிகழாமல் இருப்பதற்கு சில விஷயங்கள் அடிப்படையாக இருக்கின்றன. பெரிதாக ஒன்றுமில்லை… உங்களுடையே பேவரைட் கலர், மனைவிக்கு பிடிச்ச கலர், என் பொண்ணுக்கு இந்த கலர் தான் ராசி என்று செண்டிமெண்ட் பார்க்காமல் கார் வாங்கும் போது எது பாதுகாப்பான கலர் என்று யோசித்து வாங்க வேண்டும். காரின் கலருக்கும் விபத்துகளுக்கும் நிச்சயம் ஒரு முக்கிய தொடர்பு இருக்கிறது.
சாதாரணமாக வெள்ளை நிற கார்களை முதல் முறையாக கார் வாங்குபவர்கள் தவிர்த்து விடுவார்கள். எளிதில் அழுக்கடைவதும், பராமரிப்பது சிரமம் என்பதாலும் இதை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. ஆனால், இந்த வெள்ளை நிற கார்கள் தான் பாதுகாப்பானவை என்கிறார்கள். டார்க் கலர் கார்களை விட இந்த வெள்ளை நிற கார்கள் விபத்தில் சிக்கும் அபாயம் மிகவும் குறைவு. இதற்கு மிக முக்கிய காரணம், தூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு டார்க் நிறத்தில் இருக்கும் கார்கள் எளிதில் தெரியாதது தான். குறிப்பாக, இரவு நேரங்களில் ஹெட்லைட் ஒளியில் டார்க் கலர் கார்களை விட வெள்ளை நிற கார்கள் தெளிவாக தெரியும். அதே சமயம் கருப்பு, நீலம், சாம்பல் நிற கார்கள் தெளிவாக தெரிவதில்லை என்கிறது ஆய்வு. இன்ஸ்யூரன்ஸ் இழப்பீடு தொடர்பான அறிக்கைகளில் வெள்ளை, மஞ்சள் போன்ற வெளிர் நிற கார்களை விட கருப்பு, நீலம், சாம்பல் உள்ளிட்ட நிறத்திலான கார்கள் அதிகம் சிக்கியிருப்பதாக சொல்கிறர்கள். 

இது தவிர, இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் வெள்ளை நிற கார்களை நிறுத்தியிருந்தாலும், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தூரத்திலிருந்தே கார் நிற்பது நன்றாக தெரியும் என்கிறார்கள். டெல்லி, மும்பை, சென்னை போன்ற வெப்பம் அதிகம் இருக்கும் ஊர்களுக்கு வெள்ளை நிற கார்கள் இன்னும் சிறந்தது. சூரிய ஒளியை வெள்ளை நிறம் தடுக்கும் சக்தியைக் கொண்டதால், காருக்குள் இருக்கும் ஏசியிலிருந்து வரும் குளிர்ச்சி சிறப்பாக இருக்கும். அட பார்க்கிங் பிரச்சனைகள் இருக்கிற இந்த நகரங்களில் இரவு முழுவதும் காரை ரோட்டில் நிறுத்தியிருந்தாலும் கூட, நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு நம் கார் நிற்பது மிகத் தெளிவா தெரியும். அதனால இனி கார் வாங்கணும்னு முடிவு பண்ணும் போதே நமக்கு எந்த கலர் கார் பாதுகாப்பானது என்றும் முடிவு பண்ணிக்கோங்க… அப்ப தான் நம்மளோட பயணங்களும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாக அமையும்.