×

சிறந்த வெற்றியாளர்களின் பொன்மொழிகள் உங்கள் சிந்தனைக்காக!!

இந்தப் பெண்ணிடம் உள்ள திறனைக் கொண்டு இவளால் சிறப்பான படைப்பைத் தர முடிந்தது என்று என்னைப் பற்றி எல்லாரும் நினைவுகூர வேண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த வெற்றியாளர்கள், தலைவர்களின் பொன்மொழிகள் எப்போதுமே நம் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பயன்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்: உலகில் வேறு யாருடனும் உங்களை ஒப்பிடக்கூடாது. அப்படிச் செய்வீர்களானால் அது உங்களையே நீங்கள் அவமதிப்பது போன்றாகும். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்: தொழிலில் வெற்றியடைந்த பாதிப்பேரை
 

இந்தப் பெண்ணிடம் உள்ள திறனைக் கொண்டு இவளால் சிறப்பான படைப்பைத் தர முடிந்தது என்று என்னைப் பற்றி எல்லாரும் நினைவுகூர வேண்டும்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த வெற்றியாளர்கள், தலைவர்களின் பொன்மொழிகள் எப்போதுமே நம் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பயன்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்: உலகில் வேறு யாருடனும் உங்களை ஒப்பிடக்கூடாது. அப்படிச் செய்வீர்களானால் அது உங்களையே நீங்கள் அவமதிப்பது போன்றாகும்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்: தொழிலில் வெற்றியடைந்த பாதிப்பேரை வெற்றியடையாத மீதம் பேரிடமிருந்து பிரித்து வைப்பது அவர்களது விடாமுயற்சியே காரணமாகும்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்: நான் தினசரி எனக்குள் கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி ‘என்னால் மிக முக்கியமாகச் செய்யவேண்டிய காரியத்தைதான் இப்போது செய்கிறேனா?’

கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ்: எதிர்பார்ப்பை விட அதிகமாக செய்து காட்ட வேண்டும்.

கூகுள் இணை நிறுவனர் செர்கெய் பிரின்: சிறிய பிரச்னைகளை தீர்ப்பதைக் கட்டிலும் பெரிய பெரிய பிரச்னைகளை தீர்ப்பது மிக எளிது.

எழுத்தாளர், திரைக்கதை வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் ஜே.கே.ரௌலிங்: இந்தப் பெண்ணிடம் உள்ள திறனைக் கொண்டு இவளால் சிறப்பான படைப்பைத் தர முடிந்தது என்று என்னைப் பற்றி எல்லாரும் நினைவுகூர வேண்டும்.

விர்ஜின் குழும நிறுவனர் ரிச்சர்டு பிரான்ஸன்: தொழில் வாய்ப்புகள் என்பது பேருந்துகள் போல; எப்போதும் அடுத்து ஒன்று வந்து கொண்டேயிருக்கும்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பேஜோஸ்: சிறந்த அனுபவங்களை அதிகரித்துக் கொண்டே நாம் சென்றால், அதை நமது வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் சொல்வார்கள். வாய் வார்த்தைகள் எப்போதும் வலிமையானவை.

தொழிலதிபர், ஊடகவியலாளர், அரசியல் ஆலோசகர் ஆலன் ஷுகர்: ஒரு சிறந்த தலைவர் என்பது அவரது தொழிலில் முன்னோடி என்று பெயர் பெற வேண்டிய அவசியமில்லை; தெளிவான சிந்தனையுடன் தொலைநோக்கோடு சிறப்பாக செயல்படுபவர்கள் தான் நினைவில் நிற்பார்கள்.

மீடியா பிரபலம், நடிகை, கல்வியாளர் ஓபரா வின்ஃபிரை: எனக்கு தோல்விமீது நம்பிக்கை கிடையாது. அதை நடந்த விதத்தை உணர்ந்து கொள்வோமானால் தோல்வி என்பதே இல்லை.

டைசன் கம்பெனி நிறுவனர் ஜேம்ஸ் டைசன்: சில நேரங்களில் அழுத்தம் காரணமாக தோற்றுபோனது போல உணர்ந்து எல்லாவற்றையும் கைவிடலாம் எனத் தோன்றும்போது முன்னிலும் முனைப்பாக செயலாற்ற வேண்டும் என உத்வேகத்துடன் பணியைத் தொடர்ந்தோமானால் அந்த எண்ணத்திலிலுந்து விடுபட்டுவிடலாம் என்பதே எனது அனுபவப் பாடமாகும்.

டுவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்ஸி: எந்த ஒரு விஷயத்திலும் துல்லியத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். சிறப்பாகச் செயல்படுவதற்கு அந்த விஷயங்களை குறிப்பிட்ட அளவுக்கு வரையறைத்துக் கொள்ள வேண்டும்.

தி ஹஃப்பிங்டன் போஸ்ட் இணை நிறுவனர் ஏரியானா ஹஃப்பிங்டன்: பயந்து போனாலும் உங்கள் கனவு விஷயங்களை சாதிக்கும் வகையில் எப்போதும் செயல்படவேண்டும்.

நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசைக்கலைஞர் சேத் மாக்ஃபார்லேன்: நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி; சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறலாம், சில நேரங்களில் அது முடியாமலும் போகலாம்.

நடிகை, திரையிசை பாடலாசிரியர் மற்றும் பாடகி பியான்ஸ்: ஒருவித பதற்றத்துடன் வேலை செய்வது என்பதுகூட ஆரோக்கியமான விஷயம்தான்- எந்தச் செயலையும் கடுமையான உழைப்புடனும் அது வெற்றிகரமாக இருக்க வேண்டும் என நீங்கள் கருதுவதால் ஏற்படக்கூடிய பதற்றமாக இருக்கக்கூடும்.